Subscribe Us

header ads

We Support என்று ஹேஸ்டேக் போட்டு தத்தளித்து திரிகின்றவர்களே! உங்களைத்தான்...


இருபது வருடத்துக்கு முந்திய ஐக்கிய அரபு எமிரேட்சின் பாதுகாப்பு படையில் பாகிஸ்தான், ஈரான், லெபனான், எகிப்து , ஆப்கானிஷ்தான், 
நேபால், போன்ற நாட்டவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள், அதற்கு சனத்தொகை குறைவு, பாதுகாப்பு படைக்கு உள்வாங்க கூடிய அளவுக்கு ஆட்கள் இல்லை, பாதுகாப்பு தொடர்பான அறிவு கம்மி, என்பன காரணங்களாக இருந்தன. ஆனால் அதற்கு பிந்திய காலங்களில் நாட்டின் சனத்தொகை அதிகரிப்பால் தமது சொந்த நாட்டு மக்களை பாதுகாப்பு படைக்குள் உள்வாங்கி கொண்டு ஏனைய நாட்டு மக்களை அதிலிருந்து படிப்படியாக விடுவித்தார்கள், இப்போதும் கூட ஐக்கிய அரபு எமிரேட்சின் பாதுகாப்பு படையில் விரல் விட்டு எண்ணக்கூடிய பாகிஸ்தானியர்களை நாம் காணலாம். அதே போன்று ஐக்கிய அரபு எமிரேட்சில் வாழும் ''ரோயல் பெமிலி'' களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக உள்நாட்டவர்களுடன் இணைந்து நேபாளத்தவர்களும் கடமை புரிவதை நாம் காணமுடியும்.



இதை ஏன் சொல்கிறேன் எனில்...,

தற்போதைய மத்திய கிழக்கு கள நிலவரத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் (இறைவன் கருணை காட்ட வேண்டும் அப்படியொரு நிகழ்வு ஏற்படாமலிருக்க) ஒரு போர் ஏற்படுமாக இருந்தால் சவூதியோ, கட்டாரோ, ஐக்கிய அரபு எமிரேட்சோ, குவைட்டோ, பஹ்ரைனோ, தமது நாடுகளில் வாழும் வெளிநாட்டவர்களிடம் தமது நாட்டு படையணிகளில் உள்ளவர்களின் ஆள் பலம் போதாது ஆகவே தமது படையணிகளின் ஆள்பலத்தை அதிகரிப்பதற்காக தமது நாட்டு பாதுகாப்பு படையில் வந்து சேர்ந்து நாட்டுக்காக போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தால்...,

We Support Qatar, We Support KSA, We Support UAE என்று ஹேஸ்டேக் போட்டு தத்தளித்து திரிகின்றவர்களில் எத்தனை பேர் அந்த நாட்டு படையணிகளில் இணைந்து நீங்கள் நேசிக்கும் நாட்டுக்காக நீங்கள் ஆதரவளிக்கும் நாட்டுக்காக களம் காண முன் வருவீர்கள் ?

முன்வருகின்றவர்கள் வந்து பின்னூட்டமிடுங்கள், இல்லாதவர்கள் பின்கதவால் ஓடிப்போய் தூர நின்று We Support என்று நீங்கள் ஆதரிக்கும் நாட்டின் பெயரை சொல்லி கூவுங்கள்.

-Razana Manaf-

Post a Comment

0 Comments