(தொகுப்பு: எம்.எஸ்.எம்.ஸாகிர், ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மருதானை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களில் 94 குறூப் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு சங்கத்தின் தலைவர் எஸ்.எம். றிபாய் மௌலானா தலைமையில் மாளிகாவத்தை செரண்டீப் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(10) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரைக்கார், பேராசிரியர் எம்.ரி.ஏ.புர்கான், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கல்லூரியின் ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டில் அனர்த்தங்கள் வரும் போது 94 குறூப் அங்கத்தவர்கள் தனது பூரண பங்களிப்பை வழங்கத் தயங்குவதில்லை. கொழும்பு ஸாஹிராவின் முன்னேற்றத்திற்காகவே அதிகமான உதவிகளைச் செய்து, அர்ப்பணிப்புடன் செயற்படும் இவர்கள், பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலும் அதிக அக்கறை கொண்டு உதவி வருவதுடன் இப்பாடசாலையில் கற்றதன் மூலம் இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் காணப்படுவதோடு, இவர்களின் ஒன்று கூடல்கள் அனைத்தும் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அமைவதான நடவடிக்கையாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது விஷேட உரையையும், துஆப் பிரார்த்தனையையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கதீப் எம்.என்.எம். இஜ்லான் மௌலவியும் நன்றியுரையை சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.றிபாய் மௌலானாவும் வழங்கினர்.
நிகழ்வுகளை முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் தொகுத்து வழங்கினார்.
0 Comments