Subscribe Us

header ads

கள்ளக்காதலனுடன் பிறந்த குழந்தையை விற்பனை செய்த தாயொருவர் கைது


பிறந்த குழந்தையை விற்பனை செய்த தாயொருவர் , கள்ளக்காதலன் மற்றும் இடைத்தரகருடன் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மஹபாகே பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குழந்தை 50 ஆயிரம் ரூபாவுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த குழந்தையற்ற பெண்ணொருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

பசறை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெலிசர பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு பெற்று அங்கு இளைஞரொருவருடன் வசித்து வந்துள்ளதுள்ளார்.

அவர் வத்தளையில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் கர்ப்பமான குறித்த பெண் ராகமை மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்துள்ளார்.

எனினும் குழந்தையை காணக்கிடைக்காத வீட்டு உரிமையாளர் குழந்தை தொடர்பில் வினவியுள்ளார்.

இதன்போது , குழந்தை வீட்டினுள் உறங்குவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் , மற்றொரு நாள் குழந்தை தொடர்பில் வினவியுள்ள நிலையில் , குழந்தையை கணவர் கொண்டு சென்றுள்ளார் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் , இது தொடர்பில் சந்தேகித்த வீட்டு உரிமையாளர் காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் , கணவர் என கூறிய நபர் கள்ளக்காதலன் என பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குழந்தை கிடைத்துள்ளதை மறைப்பதற்கு இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக காவற்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments