கிழக்கு முதலமைச்சரின் நிதியொதிக்கீட்டின் ஊடாக ஓட்டமாவடி மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்டு வந்த பஸ் தரிப்பிடம்மற்றும் மீன் சந்தைக் கட்ட வர்த்தகத் தொகுதி என்பன திறந்து வைக்கப்படன்.
12.05.2017 அன்று நடந்த நிகழ்வில் ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், வாகரை பிரதேச சபை செயலாளர் எஸ்.இந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய் செலவில் நெல்சிப் வேலைத் திட்டத்தில் அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடமும் ஐம்பது இலட்சம் ரூபாயில் பத்து மீன் சந்தைக் கட்டடங்களும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன,
மேலும், ஓட்டமாவடியில் தமது நீண்ட நாள் தேவையாக காணப்பட்டு வந்த பஸ் தரிப்பிடம் திறந்துவைக்கப்பட்டமை தமக்கு பாரிய மகிழ்ச்சியை அளிப்பதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.
இதனுடன் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் ஓட்டமாவடியிலிருந்து நாவலடி உள் வீதி வழியாக மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் பஸ் சேவையொன்றும் முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது,
இதனூடாக உள் கிராமங்களில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து இலகு படுத்தப்பட்டுள்ளது,
அத்துடன் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏதுவாக கடைகளை வழங்கியமைக்கு வர்த்தகர்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.






0 Comments