Subscribe Us

header ads

நீதிக்கும் சமாதானத்துக்குமான சமூக இளைஞர் பேரவையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ஏ.எம்.றொஸான் தெரிவு.

( J.MOHAMED RINSATH )


சமூக சேவைக்காக நாட்டின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இயங்கிவரும் "நீதிக்கும் சமாதானத்துக்குமான சமூக இளைஞர் பேரவை" Social Youth Council for Justice and Peace இன் அம்பாறை மாவட்ட இணைப்பாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கலை கலாச்சாரத்துக்கு பொறுப்பாளராகவும் சாய்ந்தமருது ஏ.எம்.ரோஷன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.


அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள அதன் செயலகத்தில் இடம்பெற்ற நேர்முக பரிட்சையை தொடர்ந்து, நேற்று இடம்பெற்ற அகில இலங்கை ரீதியான நிர்வாக தெரிவின் போதே இவர் நியமிக்க படுத்துள்ளார்.


அதிகமான தொழில் அதிபர்களையும்,கல்விமான்களையும் கொண்டு முன்னெடுத்து வரும் இப்பேரவை நாடளாவிய ரீதியில் தமது அமைப்பின் மூலமாக நிதிகளை வழங்கி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றனர். அண்மைக்காலமாக சமூக சேவை நோக்கில் இயங்கிவரும் இவ்வமைப்பினைகொண்டு அம்பறை மாவட்டத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதில் இளைஞர்களுக்குள் சமூக சேவையில் மிக துடிப்பாக இயங்கக்கூடிய இளைஞன் ஏ.எம்.றொஸான் இன் மூலமாக எதிர்காலத்தில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும்மென நம்பப்படுகிறது.

Post a Comment

0 Comments