Subscribe Us

header ads

ஸ்ரீபாத மலைக்கு யாத்திரை செல்லுபவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்


ஸ்ரீபாத மலைக்கு யாத்திரை செல்லுபவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பருவ காலங்கள் தவிர்ந்து, இரவு வேளையில் ஸ்ரீபாத மலையில் ஏறுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது என ஸ்ரீபாத மலைக்கு பொறுப்பான பிரதான தேரர் பெங்கமுவே தமடீனா தெரிவித்துள்ளார்.
நல்லத்தெனிய பௌத்த மையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
பருவ காலங்கள் தவிர்ந்து எனைய நாட்களில் இரவில் மலை ஏறுவதற்கு முன்னதாக எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது ஸ்ரீபாத மலைக்கு செல்லும் சில குழுக்கள் மத வெறுப்பு மற்றும் இனவெறி ஆகியவற்றை தூண்டிவிட்டு தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பருவ காலப்பகுதி தவிர்ந்து ஏனைய நாட்களில் செல்ல விரும்புபவர்கள், அனுமதியுடன் பகல் நேரத்தில் ஸ்ரீபாத மலையேற முடியும் என மலைக்கு பொறுப்பான பிரதான தேரர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இரவில் தங்கியிருக்க எவருக்கும் அனுமதி வழங்கக் கூடாது என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments