Subscribe Us

header ads

தன்னைக் கடத்தியதாக பொய் கூறி மனைவியிடம் கப்பம் பெற முயற்சித்தவர் சிக்கினார். #இலங்கையில்.


தன்னைக் கடத்தியதாக பொய் கூறி மனைவியிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்ட ஒருவர் களுத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5ம் திகதி தனது கணவர் காணாமல் போனதாகவும், நேற்றையதினம் கப்பம் கோரி சிலர் அழைப்பினை மேற்கொண்டதாகவும், பெண் ஒருவர், களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் 30 இலட்சம் ரூபா பணத்தை இவர்கள் கப்பமாக கோரியதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரே கப்பம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இதற்காக பிரிதொரு நபரின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, இவரைக் கைதுசெய்த களுத்துறை தெற்கு பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி மனைவியிடம் பணம் கப்பம் பெற முயற்சித்தவர் சிக்கினார். 

Post a Comment

0 Comments