ஒற்றை மின்வழியினைப்பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான வரித்தீர்வைக் கட்டண முறையினை இலங்கையின் மின்சாரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்து நரான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதித்து உள்ளது.
இதற்கு முன்னர் இந்தமுறையானது மூன்று மின்வழி இணைப்புகளைக் கொண்ட மற்றும் 30A மற்றும் அதற்கு அதிகமாக மின்நுகர்கின்ற நுகர்வோர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்ததமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இந்தவசதியினை தேர்ந்தெடுக்கும் அல்லது நிராகரிக்கும் வாய்ப்பு நுகர்வோரிடமே உள்ளது. மின் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இவ்வசதி செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
0 Comments