Subscribe Us

header ads

சகோதரர் ஆசாத் சாலி அவர்களே! நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா? அதை நீங்கள் கட்டாயமாக நம்புவீர்கள்.!


கடந்த 24.04.2017 அன்று வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்தின் போது முறைகேடாக செயற்பட்ட, நிதிமன்ற உத்தரவை கிழித்து காலில் போட்டு மிதித்து நீதிமன்றத்தை அவமதித்த பௌத்த மத குரு தன்னே ஞானாநந்த தேரர் உட்பட 4 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இன்று நீதிமன்றம் சமூகமளித்த தன்னே ஞானாநத்த தேரரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அப்படியானால் தேரர்கள் தவறு செய்தால் கூண்டில் அடைக்க முடியும்.. அப்படியா?

அண்மையில் மட்டக்களப்பிற்கு தன்னுடைய சகாக்களுடன் படை பட்டாளமாக வந்த ஞானசாரவை இடை மறித்த பொலிசார் நீதிமன்ற கட்டளையை கொடுத்த போது பொலிசார் முன்னிலையில் கிளித்து வீசினார்? 
ஏன் அவருக்கு எதிராக இந்த நீதி பாயவில்லை..

பள்ளிவாயல்கள் தாக்கப்படுவது தொடர்பில் பலர் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு நேரடியாக சென்று முறைப்பாடு கொடுத்த போதும் ஏன் அவரை விசாரணைக்கு கூட இன்றுவரை அழைக்கவில்லை...

ஞானசாரவை கைது செய்ய பொலிசார்,விஷேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் என படைபலத்துடன் சென்றதும் கைதுசெய்யாமல் ஞானசாரவுக்கு தலைவணங்கி திரும்பி வந்ததும் ஏன்?

முஸ்லிம் சமூகமே சிந்திக்க மாட்டாயா?....
ஏன் என்றால்...

ஞானசாரவை இயக்குவது, தங்களுடைய ஆட்சிக்கு சிங்கள மக்களின் அபிமானத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்....அதனூடாக எதிர் வரும் எந்த ஒரு தேர்தலிலும் மஹிந்த வென்றுவிடக்கூடாது...

ஞானசாரவை காட்டினால் சோனகன் தனது சத்தத்தை அடக்கி வாசிப்பான்...

மறிச்சுக்கட்டி, கரிமலையூற்று, மாணிக்கமடு என துள்ளும் முஸ்லிம்களை திசை திருப்ப ஆயுதமாக பயன்படுத்தும் அரசாங்கம் ஞானசாரவை கைது செய்ய அனுமதிக்குமா?...

பொலநறுவைக்கு சென்று உத்தியோகபூர்வமற்ற படையணியாக செயல்பட தனது ஆட்களை ஞானசார அழைக்கிறார்...
அன்று இரவு தோப்பூரில் ஞானசாரவின் ஆட்கள் துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

ஞானசாரவை கைது செய்யச் சென்ற இரண்டரை மணித்தியாளத்திற்கு இடையில் குர்நாகலில் உள்ள ஒரு ஜும்மாப்பள்ளியில் பெற்றோல் குண்டு வெடிக்கிறது.

அதைந் தொடர்ந்து இப்போது இரவு நேரங்களில்  ஒவ்வொரு பிரதேசமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் எரிந்து சாம்பலாகிறது. இன்று இரவு எங்கு என்பது நாளை காலையில்தான் தெரியும்.

இதுவெல்லாம் எதற்காக, ஞானசாரவை கைது செய்ய சென்றதற்கே இப்படியெல்லாம் நடக்கிறதே ஒருவேளை அரசாங்கம் கைது செய்தால் வேறு என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?! என்ற அச்சத்தை முஸ்லிம்கள் மீது திணித்து பீதியை ஏற்படுத்தும் காரியங்களாகும் பழய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை தவிர்த்து புதிய பிரச்சினையை உருவாக்கினால். அதனூடாக தங்களுடைய நிறைவேறிய நிறைவேற்ற இருக்கிற காரியங்களுக்கு தடையாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தையும் அவர்களது குரல்வளைகளையும் ஞானசாரவின் கட்டை அவிழ்த்து விடுவதால் நசுக்க முடியும் என்பதேயாகும்.

நான் மேலே சொன்ன அத்தனை விடயங்களையும் சகோதரர் ஆசாத் சாலி பொய் என்றும் வதந்தி என்றும் இதை யாரும் நம்பவேண்டாம் என்றும் சொல்கிறார்.
அதை ஊடகங்களிலும் சொல்லி வருகிறார்.

சகோதரர் ஆசாத் சாலி அவர்களே! நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா? அதை நீங்கள் கட்டாயமாக நம்புவீர்கள்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க அவர்களும் பிரதமர் பசில் ராஜபக்ஷ அவர்களுமே ஞானசாரவின் மீது கைபடாமல் பாதுகாக்கிறார்கள் போதுமா?...  இப்போது மக்களை நம்பச் சொல்வோமா?

அஹமட் புர்கான்
கல்முனை..

Post a Comment

0 Comments