Subscribe Us

header ads

வீ கட் டீ – சேட்டுடன் பெண்கள் கல்லூரிக்கு செல்வது மரியாதையா?


ஒரு இடத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்ற மரியாதையை உள்ளது.நேற்று அமைச்சர் ஹக்கீம் பொலன்னறுவை,மஜீதியா பெண்கள் அறபுக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார்.

ஒரு அறபு கலாசாலைக்குள் செல்வதற்கு என்று ஒரு அழகிய ஆடை முறை உள்ளது.வெண்ணிற ஆடை உடுத்தும் தொப்பி அணிந்து செல்வதும் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.அதிலும் ஒரு பெண்கள் அறபுக் கலாசாலைக்குள் ஒரு ஆண் செல்வதானால் அங்கு இன்னும் உயரிய மரியாதைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

குறித்த பெண்கள் அறபு கலாசாலைக்கு அமைச்சர் ஹக்கீம்  வீ கட் டீ –சேட்டுடன் நெஞ்சை காட்டி கொண்டு செல்கிறார்.இது தான் மரியாதையா? 

இப்படியானவர்களை பெண்கள் கல்லூரிகளுக்குள் எடுப்பதே மிகப் பெரும் தவறாகும்.குறித்த பெண்கள் முக மூடிகளை (face cover) அணிந்து மரியாதையான விதத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு இடத்திற்கு தகுந்த ஆடை கூட அணிய தெரியாதவர் எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை தீர்க்கப்போகிறார்.

அல் ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்

Post a Comment

0 Comments