Subscribe Us

header ads

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் களத்தில் வெளிநாட்டவர்கள்! சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு


இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றின் போது வெளிநாட்டவர்களின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
ஓஹிய பிரதேசத்தில் நேற்று மாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் முறிந்து வீழ்ந்த மரத்தினை ரயில் பாதையிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் உள்ளுர் மக்கள் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த ரயிலில் பயணித்த வெளிநாட்டவர்கள் வெளியில் வந்து, மரத்தை அகற்றுவதற்கு உதவி செய்துள்ளனர்.
நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ள அதிகளவான மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடியுள்ளனர்.
இந்நிலையில் உள்ளுர் மக்களுடன் இணைந்து மரத்தை அகற்ற உதவிய வெளிநாட்டவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இவர்களை பாராட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.





Post a Comment

0 Comments