நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணம் முற்றாக செயலிழந்துள்ளது.பெய்த அடைமழை காரணமாக அதிகளவான நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் பாரிய வெள்ளத்தில் இருந்து குழுந்தைகளுக்கான மருந்துகளை காப்பாற்றுவதற்கு வைத்தியர் ஒருவர் போராடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த போதும், குழந்தைகளின் மருந்துகளை காப்பாற்றுவதற்காக வைத்தியசாலை சென்றுள்ளார்.
கும்புருப்பிட்டிய பிரதேசத்தில் அரச மருத்துவ மனையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரே இந்த மகத்துவமான பணியை செய்துள்ளார்.
அவரது பெயர் பிரசாத் கொடிதுவக்கு எனவும் அவர் தனது உயிரை பற்றி கருத்திற் கொள்ளாமல் பாரிய வெள்ளத்தினை கடந்து வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றதன் ஊடாக அப்பாவி குழந்தைகளின் மருத்துகளை காப்பாற்றியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்திற்கு ஏற்படவிருந்து பாரிய இழப்பையும் அவர் தடுத்துள்ளார். இதன்மூலம் இலட்சகணக்கான மருந்துகளை அவர் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார்.


0 Comments