Subscribe Us

header ads

இலங்கையை சேர்ந்த பெண்ணொருவருக்கு 20 பிள்ளைகள் - 78 பேரக்குழந்தைகள்! சாதித்த தாய்...(படங்கள்)


இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் 20 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தம்புள்ளை - கலேவல பகுதியை சேர்ந்த 78 வயதான எச்.ஏ.ரொசலின் நோனா என்ற பெண்மணி 20 பிள்ளைகளை பெற்றுள்ளார். இந்த தாயாரின் கணவருக்கு 86 வயதாகின்றது.
இந்த தம்பதிகளுக்கு 78 பேரக்குழந்தைகள் உள்ளனர். எனினும் 20 குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக தான் ஒரு போதும் வைத்தியசாலைக்கு செல்லவில்லை என குறித்த தாயார் தெரிவித்துள்ளார்.
கணவர் கூலி வேலை செய்தமையினால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது பிள்ளைகளை வளர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
20 பிள்ளைகள் அல்ல 24 பிள்ளைகளை இந்த உலகில் பெற்றெடுப்பதற்கு தான் எதிர்பார்த்ததாகவும், எனினும் வைத்தியர்களின் ஆலோசனையினால் அந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 பிள்ளைகளை இந்த உலகில் பெற்றதெடுத்தமை குறித்து தான் மிக்க மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதும் தனது கணவருடன் ஆரோக்கியமாக வாழ்வதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உலக அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அதனை பெருமைப்படுத்தும் வகையில் 78 வயது தாயின் தகவல் வெளியாகி உள்ளது.


Post a Comment

0 Comments