கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டம் சுமார் பத்து நிமிடம் தலைவரும் அதிபருமான ரோஸ் ஆசிரியர் அவர்களின் தலைமையிலும் அதன் பின் உப தலைவர் சாஹிர் சேர் தலைமையில் நீண்ட நேரம் தைரியமாகவும் நேர்த்தியாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாடசாலை நிறை குறைகள் சம்பந்தமாகவும் எதிர்கால முன்னெடுப்புக்கள் சம்பந்தமாகவும் விரிவாக நீண்ட நேரம் ஆக்கபூர்வமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன் வருடாந்த பரிசளிப்பு விழா ஒன்று நடாத்தப்பட விருப்பதினால் அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டதோடு ஒழுக்க குழுவிற்கு மேலதிக புதிய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டது .
பல விடயங்கள் சம்பந்தமாக பேசப்பட்டாலும் பேசப்பட்ட விடயங்களை செயல்படுத்த கூடியவர்கள் பாடசாலை சார்பாக கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளாதததாலும் பாடசாலை விடயம் சம்பந்தமான கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு சம்பந்தபட்டவர்கள் யாரும் கூட்டத்தில் இல்லாதததால் இனி நடைபெறும் கூட்டங்களை அதிபரே நடாத்த வேண்டும் என்றும் அதிபருக்கு சமூகம் தரமுடியாவிட்டால் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என்றும் உறுப்பினர்களால் கூறப்பட்டது .
மேலும் பல விடயங்கள் சம்பந்தமாகவும் பழைய மாணவர்கள் சங்கத்தால் பாடசாலைக்கு செய்ய வேண்டிய சேவைகள் சம்பந்தமாக பேசப்பட்டதோடு பழைய மாணவர்கள் சங்க விண்ணப்படிவங்கள் விண்ணப்பிக்கப்பட்டதோடு உறுப்பினர்கள் சிலரால் அவ்விடத்திலேயே விண்ணப்படிவங்களை பூரணப்படித்தி அதற்கான கட்டணங்களை வழங்கினார்கள்.
அடுத்த கூட்டம்: இன்ஸா அல்லாஹ்
27.08.2017 அன்று காலை
9.00 மணிக்கு நடைபெறும்
-Rizvi Hussain-









0 Comments