அண்மையில் இடம் பெற்ற தாலாவ ஆயுத வெடிப்பு அணர்த்தத்தின் பின்பு அந்த ஆயுதக்கிடங்கை கல்பிட்டி கண்டல் குழி சீ காட் (Sea gard)வலாகத்தில் அமைக்க திட்டமிட்டு அவ்விடத்தை பார்வையிட்டு சென்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.
ஆகவே இது தொடர்பாக எமது மக்களை விழிப்புணர்வு செய்ய வேண்டிய தேவைப்பாடும் கடமையும் எமக்குள்ளது.
நிம்மதியான சூழலில் வாழும் நமக்கு சில நேரங்களில் இப்படியான சங்கடமான தகவல்களும் நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன.
ஆகவே இது தொடர்பாக நாமும் எமது மக்களும் ஒன்று சேரவேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
ஆகவே இன்ஷா அல்லாஹ்
இது தொடர்பான பொதுக் கூட்டம் ஒன்றை எதிர் வரும் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03:00மணிக்கு கல்பிட்டி செயாப் மண்டபத்தில் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கல்பிட்டி தொடக்கம் நுறைச்சோலை வரையுமான மக்களுக்கு இக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
ஆகவே எமது பிரதேசத்தின் எதிர் காலத்துக்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இறைவனை முன் வைத்து எமது சக்தியை பலப்படுத்துவோம்


0 Comments