வவுனியா மதினா நகர் ஜிம்மா பள்ளிவாசலில் 'மதினா மக்தப்' ஒருவருட பூர்த்தி விழா மக்தப் எம்.ஆர்.பி. நசுறுதீன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வின் மூலம் 'மதினா மக்தப்' என்ற இஸ்லாமிய மார்க்க கல்வியை நிறைவு செய்த மாணவர்கள் இன்று (22) தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்திருந்தனர்.
இதன்போது சிறந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்பதுடன் நாங்கள் ஏனைய சமூகத்திற்கு முன் உதாரணமாக செயற்பட வேண்டும் என்று மதினா நகர் ஜிம்மா பள்ளிவாசலின் செயற்பாட்டாளர் யூ.அயுப்கான் தெரிவித்துள்ளார்.
ஆனால் நாங்கள் அரசியலுக்காகவும் சொந்தத் தேவைகளுக்காகவும் பிரிந்து நிற்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக அல் கலீம் இர்சாட் உவைஸ் இனாமி மற்றும் கௌரவ அதிதியாக வடமாகாணத்திற்கான மக்கதப் ஒருங்கிணைப்பாளர் மௌலவி ஐ.எம். இமாம் , மாணவர்களின் பெற்றோர் மற்றும் மதினா நகர் கிராமத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.










0 Comments