முன்னொரு காலம் இருந்தது புத்தளம் மாரியம்மன் கோவில் சந்தி தான் புத்தளத்தின் கூளங்கள் குமிக்கும் இடமாக இருந்தது, அப்படி இருந்த அந்த பகுதி காலப்போக்கில் குடியிருப்பாக மாறியதால் அந்த இடத்தில் கூளங்களை சேமிப்பதில்லை என்ற முடிவு நமது நகர சபையால் எடுக்கப்பட்டு வேறு இடத்திக்கு மாற்றப்பட்டது.
கூளங்கள் குமுக்குமிடத்தில் மக்கள் குடிபெயர்ந்து சுகாதாரமாக வாழ முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டாலும் இன்று அந்த மாரியம்மன் கோவிலுக்கு பின்னால் வாழும் மக்கள் அவர்களுடைய கூளத்தை அந்த கோவிலுக்கு பின்னால் உள்ள சுற்று மதிலுக்கு அருகில் குவித்து வருவதை அங்குள்ள சமுக ஆர்வலர்கள் நமது தொண்டர்களின் கருத்தாடலுக்கு கொண்டுவந்தார்கள்.
கொண்டு வந்ததன் பிற்பாடு அங்கு இருக்கும் கூளங்களை அகற்றி, அதனை தொடர்ந்து வரும் அடுத்த நாளில் அங்கு வாழும் குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றையும் செய்வதாக நமது தொண்டர் குழு திட்டத்தை தீட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அந்த இடத்தை Community Cleanup 2017 என்ற நிகழ்வின் மூலம் சுத்தம் செய்தது.
நேற்று திங்கட்கிழமை அங்கிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு திட்டமொன்றை செய்வதற்காக செல்லும் வழியில் அவர்கள் நேற்று சுத்தம் செய்த இடத்தின் நிலைமயை கண்டு அந்த மக்களை விழிப்புணர்வு படுத்த வேண்டிய திட்டத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டார்கள்.
அது தான் நேற்று சுத்தம் செய்த இடம் இன்று மீண்டும் குப்பை தட்டும் இடமாக காட்சியளித்தது மட்டுமல்லாது, நமது தொண்டர்களால் எழுதப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் கிழித்து வீசப்பட்டுள்ளன.
எங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்தால் அங்கிருக்கும் மக்கள் நன்மையடைவார்கள் என்று நினைத்து அவர்களுக்கு உதவியது நமது தவறா? அல்லது இங்கு கூலம் தட்டுவதால் அங்கிருக்கும் மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்று நினைத்தது தவறா? அல்லது தமிழ் மக்கள் வழிபாடும் இடத்தை சுத்தமாக வைக்க நமது தொண்டர்கள் உதவி செய்தது தவறா?
நமது சமுகம் நமது தொண்டு சேவையை ஊக்குவிக்காவிட்டாலும், குறைந்தது அந்த சேவைக்கு கெளரவமாவது வழங்கலாமல்லவா..
நமது நற்பணி தொடரும்
Silent Volunteers
0 Comments