Subscribe Us

header ads

சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தி உணவகத்தில் வாள் வெட்டு மூவர் படுகாயம் (PHOTOS)

பாறுக் ஷிஹான்


உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த மூவரை  கடைக்குள் திடீரென பிரவேசித்த இனந்தெரியாத நபர்கள்  வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் (7)  பிற்பகல் 4  மணியளவில்  சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச்   சந்தியில் உள்ள உணவகத்தில்  இடம்பெற்றுள்ளது.


குறித்த   வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக  சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மோட்டார் சைக்கிளில் வருகைதந்த ஆறு இளைஞர்கள் உணவகத்துக்குள் திடீரென   உட்புகுந்து  அவர்கள்  மீது சரமாரியாக வாளால் வெட்டி  தாக்கியுள்ளனர்.   

இதன் போது இச்   சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளரான 32 வயதுடைய சிவபாலன் சிவலக்ஷ்மன் ஆட்டோச் சாரதியான 24 வயதுடைய நாகசாமி நந்தன் வெளிநாடொன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய 22 வயதுடைய வேணுகோபால் சுகந்தன் ஆகியோரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Post a Comment

0 Comments