Subscribe Us

சிலாபம் கடற்கரையில் செல்பி எடுத்த அந்த 4 யுவதிகளுக்கும் நடந்தது என்ன? விபரங்கள் உள்ளே...


சிலாபம் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 4 பெண்கள் நேற்று மாலை இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடற்கரையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் , 21 வயதுடைய யுவதியொருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.

இவர்கள் சிலாபம் - இலிப்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

காணாமல் போன யுவதியை தேடி காவற்துறையினர் , கல்பிடிய கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments