பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் கோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி நேற்றிரவு(20) கோப்பாய் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் கசிப்பினை முல்லைத்தீவு பகுதியில் விற்பனை செய்து வந்த நிலையில் பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர்.
இதன்போது இவர்களிடம் இருந்து 25 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
0 Comments