அறிக்கை..:
அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி,
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,
பிரதித் தலைவர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
2017-04-21
அஸ்ஸலாமு அலைக்கும்..
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய புத்தளம் வாழ் மக்களே..!!
எனது அரசியல் வாழ்க்கை சுமார் 30 வருடங்களையும் கடந்து இன்றும் மக்கள் சேவையை நோக்காக கொண்டு திறம்பட நகர்ந்து செல்கின்றது. புத்தளம் மாவட்ட ஒட்டுமொத்த மக்கள் மீதான நேசம், புத்தளம் மாவட்ட மக்களின் வாழ்வாதார, பொருளாதார மற்றும் பௌதீக ரீதியிலான அபிவிருத்தி என்பற்றின் மீதான அளவில்லா அக்கறை, இன்னும் எமது நாளைய தலைமுறைக்கான நிச்சியப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத்தை உறுதிசெய்தல் தொடர்பான ஆழ்ந்த சிந்தனை, அக்கறை போன்றவைதான் 30 வருடங்களையும் கடந்து இன்றும் எனக்கு மக்கள் சேவையை மைய்யமாக கொண்டதானதொரு அரசியலை செய்வதற்கான தூண்டுதலாக, அச்சாணியாக அமைந்திருக்கின்றது என்பது திண்ணமாகும். எனவேதான் இலங்கை சிறுபான்மை சமூகத்திற்க்கு சிறந்து தலைமைத்துவத்தை வழங்கி பாகுபாடின்றி சேவைகளை அள்ளி வழங்கும் எமது தேசிய தலைவர், கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்களுடன் கைகோர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக நாம் பயணிக்கின்றோம்.
எனது 30 வருடங்கால அரசியலானது ஒரு நாளும் பிரதேசவதத்தையோ, தனிநபார் குரோதத்தையோ மைய்யப்படுத்தி அமைந்திருக்கவில்லை என்பது எனது அரசியல் வாழ்க்கை பற்றி தெரிந்தவர்கள் நன்கறிந்த விடயமாகும். எனது அரசியல் பயணமானது நகரசபை, மாகாணசபை என இன்று இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பாராளுமன்றம் வரை பரிணமித்துள்ளது. கடந்து வந்த பாதையானது ஒருநாளும் சந்தோசம் நிறைந்ததாகவோ, நிம்மதியானதாகவோ மட்டும் இருந்துவிடவில்லை. இன்று எதிர்ரொலிக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் காலாகாலமாக நான் எதிர்கொண்டவை தான். நிறைகளை விட்டுவிட்டு, குறைகளை மட்டும் தேடி எடுத்து, குறைகள் இல்லாவிடின் தாமாகவே உருவாக்கி விமர்சிக்கும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அன்றுதொடக்கம் இன்றுவரை இருக்கவே செய்கின்றார்கள்.
புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும், அனைத்து ஊர்களிலும் எந்த மூலை முடுக்கிற்க்கு சென்றாலும் கூட நிச்சியமாக எனது பெயரை சொல்லும் வகையிலான ஒரு சேவை அனைத்து ஊர்களிலும் இருக்கின்றது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இது விமர்சிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் ஒரு சிலரின் கண்களுக்கு ஒருநாளும் புலப்படபோவதில்லை.
தற்போதைய புத்தளம் அரசியல் நிலவரத்தை கருத்தில்கொண்டு சில சந்தேகங்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டிருக்கின்றது....
புத்தளம் நகரத்தை மட்டுமே கருத்தில்கொண்டு எமது சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற விமர்சனத்தை முன்வைக்கும் சிலரின் பார்வையில் உள்ள குறைப்பாடு பற்றியும், தீரவிசாரிக்க முடியாமல் பொய்களை நம்பி, மேலும் மேலும் பொய்களை பரப்பும் சிலரின் குறுகிய புத்தி அல்லது புத்திமந்தம் தொடர்பிலும் நான் பெரிதும் கவலையடைகிறேன். தற்போதைய எனது சேவைகள் பற்றியும், கடந்தகால எனது அரசியல் செயற்பாடுகள் பற்றியும் மொத்தமாகவே பிரதேசவாதத்தை மட்டும் மைய்யப்படுத்தி என்னை விமர்சிப்பவர்கள் தமது ஊரையோ அல்லது பிரதேசத்தையோ கொஞ்சம் சுற்றி பார்க்கும் போது எனது பெயர் சொல்லும் எத்தனையோ சேவைகள் அங்கு இருப்பதை அவர்களின் கண்கள் கண்டிருக்கலாம், ஆனாலும் அவர்களின் ஞாபக சக்தியின் மந்தம் காரணமாக அவர்கள் மறக்கடிக்கப்பட்டதையும் இட்டு பெரும் துயரடைகின்றேன்.
அன்பானவர்களே...!!
புத்தளம் நகரை மட்டும் மைய்யப்டுத்தி, ஏனைய புற நகர் பிரதேசங்களை புறக்கணித்து நாம் சேவை செய்வதாக ஒரு சில விஷமிகளால் பரப்பப்படும் பொய்கள் உண்மைத் தன்மை அற்றதாகும்.. எனது எந்த சேவையிலும் பிரதேசவாதத்தை நான் ஒருநாளும் முன்னிறுத்தவில்லை. நான் அவ்வாறான குறுகிய எண்ணம் படைத்தவனுமல்ல... கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, முந்தல் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேச எல்லைகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எனது பெயர் தாங்கி காணப்படும் எத்தனையோ சேவைகள் இதற்க்கு தகுந்த ஆதாரங்களாகும்..
இதுதான் உண்மை...!!
# புத்தளம் நகரத்தில் சுமார் 16 KM (கிலோமீட்டர்) அளவிலான பாதை காபெட் போடப்பட்டுள்ளது என்றும், ஏனைய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இதுவரை புத்தளம் நகரத்தில் எனது ஒதுக்கீட்டில் சுமார் 2.5 KM (கிலோமீட்டர்) அளவிலான பாதையே காபெட் இடப்பட்டுள்ளது. ஏனையவைகள் புறநகர் பிரதேசங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன..
# மேலும் எனது வேண்டுகோளின் பெயரில் கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்களின் ஊடாகவும், அமைச்சர் நாவின்ன அவர்கள் ஊடாகவும் பல வீதிகளுக்கு காபெட் இடுவதற்க்கான ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
# சுமார் 300 கழிவறைகள் கட்டுவதற்க்கான நிதி தமக்கு கிடைத்ததாகவும், அதில் பாரப்பச்சம் செய்ததாகவும் ஒரு போலி செய்தியும் பரப்படுகின்றது. இதுவும் புனையப்பட்ட பொய்யான செய்தியாகும். தமக்கு சுமார் 30 கழிவறைகள் கட்டுவதற்க்கான அனுமதி மாத்திரமே கிடைத்துள்ளது என்பதே உண்மை, அதுவும் சமமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது..
# வீட்டு கடன்திட்டம் சுமார் 60 கிடைக்கப்பட்டது. அதுவும் கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, முந்தல் மற்றும் புத்தளம் ஆகிய நான்கு பிரதேசங்களுக்கும் தலா 15 வீதமே பிரித்து வழங்கப்பட்டுள்ளது..
# கடந்த ஆண்டு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களில் அமைச்சின் ஊடாக ஒரு வீட்டுத்திட்டம் கிடைக்கப்பட்டது. அது வட்டக்கண்டல், இஸ்மாயில்புரம் பகுதிக்கே வழங்கப்பட்டது, அங்கு காணி பெறப்பட்டு சுமார் 25 வீடுகள் கட்டப்பட்டன..
# இம்முறை கிடைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள்.. கல்பிட்டி வீதியில் தௌபீக் மற்றும் ஆலங்குடா நஜிபுதீன் ஆகியோர் காணிகள் வழங்கியதன் மூலம் அப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மதுரங்குளி அரசியல்வாதிகள் எவராலும் இதுவரை காணி வழங்கப்படவில்லை, இன்று காணி தந்தாள் நாளையே வேலையை ஆரம்பிக்க நாம் தயார்.. ஒத்துழைப்புக்கள் வழங்காமல் விமர்சனம் மாத்திரம் செய்வது நாகரீகமற்றது.
# Two School System என்ற செயத்திட்டம் மூலம் கடந்த அரசில் எமது மாவட்டத்தில் ஒரு சில பாடசாலைகளே அபிவிருத்தி செய்யப்பட்டன, ஆனால் நான் இம்முறை அதனை 38 ஆக உயர்த்தி கொண்டுவந்துள்ளேன்.. அதில் சுமார் 14 பாடசாலைகளில் தற்போது கட்டிட நிர்மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதுரங்குளி, பத்துலு ஓயா, கல்பிட்டி பாடசாலைகள் உட்பட கல்பிட்டி தொடக்கம் மதுரங்குளி வரையான பகுதியின் சுமார் 10 பாடசாலைகளில் தற்சமயம் இச்செயத்திட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. பிரதேச ரீதியில் பாகுப்பாடுடன் நான் செயற்படுகின்றேன் என்று விமர்சிப்பவர்களின் கண்களுக்கு இவ்வேலைகள் தென்படுவதில்லை..
# கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்களின் ஊடாக எனது வேண்டுகோளின் பெயரில் கல்பிட்டி அல்-அக்ஸா பாடசாலையில் காரியாலய கட்டிடம் ஒன்று அமைப்பதற்க்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன..
# கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்களின் உதவியுடன் கல்பிட்டி, வண்னத்திவில்லு பிரதேசங்களில் லங்கா சதொச விற்பனை நிலையம், கூட்டுறவுச் சங்க விற்பனை நிலையம் (Co-op City) போன்றனவும் கூட வழங்கப்பட்டுள்ளன.
# நேற்று நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது விழா மண்டப கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், இம்மண்டபமும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அமையவிருக்கின்றது. இதற்கான நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியும் கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுத்தீன் அவர்களின் அமைச்சு ஊடாகவே வழங்கப்படுகின்றது..
எனவே போலியான பொய்யான விமர்சனங்களை முன்வைக்கும் ஒரு சிலர் தமது கண்களை திறக்கவேண்டும்.. அதேநேரம் வெளியாகும் குற்றச்சாட்டுகளை அதன் உண்மைத்தன்மை ஆராய்ந்து மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இதுவரை எனது அரசியலில் பிரதேசவாதம் என்ற ஒன்றை நான் முன்னிறுத்தியதில்லை. புத்தளம் மாவட்ட மக்கள் யாவரும் எம்மக்களே, அவர்களுக்கான சேவைகளை சமமான முறையிலேயே நான் மேற்கொண்டு வருகின்றேன், இனியும் அவ்வாறே செயற்படுவேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றேன்..
அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி,
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,
பிரதித் தலைவர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
0 Comments