18 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வைத்துக்கொண்டு , அதனை இணைத்தளத்தில் வௌியிடுவதாக அச்சுறுத்தி பணம் பறித்த 18 வயது பாடசாலை மாணவரொருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
குறித்த இருவரும் களனி - பெஹலியகொடை பிரதேச பாடசாலையொன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களாவர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படமொன்றை WhatsApp-ல் அனுப்புமாறு கோரியுள்ளார்.
முதலில் குறித்த மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் , காதலன் கோபித்துக் கொண்டதால் பின்பு விருப்பமில்லாமல் குறித்த மாணவி அவரின் நிர்வாண புகைப்படத்தை WhatsApp மூலம் குறித்த மாணவனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பின்னர் , புகைப்படத்தை பெற்றுக்கொண்ட அந்த மாணவன் , அதை இணையத்தில் வௌியிடாமல் இருக்க வேண்டுமன்றால் பணம் தருமாறு கோரியுள்ளார்.
இதன் காரணமாக செய்வதென்ன என்று அறியாத குறித்த மாணவி அவரின் வீட்டில் பணத்தினை பெற்றோருக்கு தெரியாமல் திருடி , காதலனாகிய குறித்த மாணவனுக்கு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
சுமார் ஒரு இலட்சம் ரூபா வரை குறித்த மாணவியிடம் இருந்து அந்த மாணவர் பணம் பறித்துள்ளதாக காவற்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் அந்த மாணவர் இருபது ஆயிரம் ரூபா கோரியுள்ளார்.
அவரிடம் பணம் இல்லாததால் அவரின் உறவினரொருவரிடம் அவசர தேவையொன்றுக்கு என கூறி குறித்த மாணவி பணம் கோரியுள்ளார்.
இதன் போது , சந்தேகத்தின் பேரில் குறித்த உறவினர் இது தொடர்பில் தொடர்ந்து குறித்த மாணவியிடம் விசாரித்ததில் மாணவி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இந்நிலையில் , இது தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் பெஹலியகொடை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , 18 வயதுடைய அந்த மாணவர் காவற்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
0 Comments