Subscribe Us

header ads

தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!


தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை வாட்ஸ்-அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம் என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த விஷயம் குறித்து அந்த அறிக்கையில், 'பல வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன. அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-அப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்-அப் பயனர்கள் இருக்கின்றனர்.

Post a Comment

0 Comments