திஸ்ஸமஹாராம – யோதகண்டிய பகுதியில் மனைவியொருவர் கணவனை கொலை செய்து புதைத்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பெண்ணொருவர் தனது கணவரை (35) காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில் காணமல் போனதாக கூறப்படும் குறித்த பெண்ணின் கணவரது சடலம் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பெண்ணின் வீட்டிற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்தததை பொலிஸார் கண்டுபிடித்து, மீட்டுள்ளனர்.
இதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண் கணவரை முள்ளுத் தடி ஒன்றினால் தாக்கி கொலைசெய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறித்த பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பெண்ணை இன்று திஸ்ஸமஹாராம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments