Subscribe Us

header ads

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் தஹ்வா கருத்தரங்கு!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கு சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் இன்று சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில் இஸ்லாமிய தஹ்வா கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு, இஸ்லாமிய பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.மஸாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன் கல்குடா தஹ்வா நிறுவனப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் வளவாளராக கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினார்.

பாடசாலை மாணவிகளை பிழையான சிந்தனையிலிருந்து நெறிப்படுத்துதல் எனும் கருப்பொருளில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்குபற்றிய மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் இக்கல்லூரியில் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ள ஆறு மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான அஷ்ஷெய்க் கே.எல்.ஆதம்பாவா, அஷ்ஷெய்க் எச்.எம்.ஏ.ஜப்பார் ஆகியோரும் உரையாற்றினர்.









Post a Comment

0 Comments