Subscribe Us

header ads

மக்கா ஹரம் செரிபான கஃபத்துல்லாவில் திருமணம் நிச்சயித்த ஜோடி


உலக முஸ்லிம் உம்மத்தின் ஆன்மீகத் தலைமைத் தலமான கஃபாவுக்கு அருகில் ஒரு துருக்கிய ஜோடி திருமண நிச்சயதார்த்தத்தை மேற்கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகப் பரவி கடும் விசன அலைகளைத் தோற்றுவித்துள்ளது. குறித்த வீடியோவில் வரும் ஆண் துருக்கியின் TRT செய்திச் சேவை நிருபரான யூஸுப் அக்யொன் என அறியப்பட்டுள்ளார்.
குறித்த வீடியோவில் கேக் பரிமாறல், மோதிரம் மாற்றல் உட்பட கேளிக்கையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருவரது குடும்பங்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும் முறையான திருமண ஒப்பந்தம் நிறைவு பெறாத நிலையிலும் முஸ்லிம்களது உச்ச புனிதத்தலத்தை கேளிக்கைக்கு எடுத்துக் கொண்டதும் குறித்தும் துருக்கி உட்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இணையப் பாவனையாளர்கள் பாரிய விசனங்களை முன்வைத்து வருகின்றனர்.
‘ஒவ்வொருவரும் தாம் விரும்பிய விதத்தில் கலாசாரங்களை ஒன்றித் தம் திருமணத்தை நடத்துவதாகவும் தம் குடும்பங்களை ஆச்சரியமூட்டவே தான் இவ்வாறு இங்கே நிச்சயதார்த்தம் செய்வதாகவும்’ பேசிய வீடியோவையே அவர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த இளம் நிருபர் யூஸுப் அக்யொன்னின் தந்தை பஹாதீன் அக்யொன் துருக்கியின் முன்னணிப் பத்திரிகையொன்றின் சவூதிக்கான நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments