Subscribe Us

header ads

‘பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவை வீழ்த்தாது என்பது தெரியும்’ டி.வி.யை போட்டு உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவேசம்


இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் ரசிகர்கள் டி.வி.க்களை தெருவில் போட்டு உடைத்தனர். பெரும் கோபமாக இருந்த அவர்கள் ‘பாகிஸ்தான் ஒருபோதும் இந்தியாவை வீழ்த்தாது என்பது எங்களுக்கு தெரியும்’ என்று கூறினர். 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாற்று பெருமையை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டது. 20 ஓவர் உலக கோப்பையில் நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4–ல் வெற்றியும், ஒன்றில் சமனும் (டை) செய்துள்ளது. ஒரு நாள் போட்டி உலக கோப்பையிலும் இந்திய அணி (6 ஆட்டத்திலும் வெற்றி) பாகிஸ்தானிடம் தோற்றது கிடையாது.  இந்திய அணி இலக்கை அடைந்ததும் நாடு முழுவதும் கொண்டாட்டம் தொடங்கியது. 

பாகிஸ்தானில் ரசிகர்கள் தங்களது அணி வீரர்களை திட்டி தீர்த்தனர். பாகிஸ்தான் ரசிகர்கள் இதுபோன்று ஆவசேம் அடைவது ஒன்றும் புதியது கிடையாது, ஒவ்வொரு உலக கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும் ரசிகர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர் கதையாகவே உள்ளது. பாகிஸ்தானில் ரசிகர்கள் டி.வி.க்களை தெருவில் போட்டு உடைத்தனர். அவர்கள் ஆவேஷமாக கோஷங்களை எழுப்பினர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். பாகிஸ்தான் வீரர்களை டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்தனர். 

போட்டி முடிந்ததும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படையெடுத்தனர். பாகிஸ்தான் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்றும் இந்திய அணியின் செயல்பாடு, விராட் கோலியின் ஆட்டத்தை பாராட்டி இந்திய அணியின் ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் தேசிய கீதத்தை தவறாக பாடிய அந்நாட்டு பாடகரையும் விடவில்லை. வீரர்களையும் விடவில்லை. இதற்கிடையே பாகிஸ்தான் பெண்கள் அணி வெற்றி பெற்றதை பாராட்டியும் கருத்துக்களை வெளியிட்டனர். 

பாகிஸ்தானில் டி.வி.யை போட்டு உடைக்கப்பட்ட காட்சிகள் அந்நாட்டு டி.வி.களில் வெளியாகியது. ஏமாற்றம் அடைந்த ரசிகர் ஒருவர் பேசுகையில், ”பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இழந்துவிட்டோம். பாகிஸ்தான் அணியினர் ஒருபோதும் இந்தியாவை தோற்கடிக்க மாட்டார்கள் என்று எனக்கு இப்போது தெரிந்துவிட்டது,” என்று கூறிஉள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் வெற்றி பெற்றால் நிர்வாண நடனம் ஆடுவதாக அறிவித்த நடிகை  குவான்டீல் பலூச்சின் மானம் காக்கப்பட்டது என்றும் டுவிட் தகவல்கள் வெளியாகியது. ஆனால், நடிகையையோ தனது சோகத்தை வெளியிட்டு இந்திய அணிக்காக ஆடுவதாக கூறி வீடியோவை வெளியிட்டு உள்ளார். 

இதற்கிடையே பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை அடிக்கும் வீடியோ காட்சியை வெளியிட்டு, இந்திய மாட பூணம் பாண்டே குவான்டீல் பலூச்சை அடிப்பதாக கருத்துக்கள் பகிரப்பட்டு உள்ளது. #IndvsPak  என்ற ஹஷ்டேக் இப்போது வரையில் டுவிட்டரில் பிசியாக உள்ளது.

Post a Comment

0 Comments