2017 ஆண்டு கற்பிட்டி அல் -அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கமானது தமது நடப்பு ஆண்டிற்கான வருட திட்டத்தை நேற்று பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற பாடசாலை நிர்வாக குழு மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன பங்குபற்றிய நிகழ்வில் பாடசாலை அதிபரிடம் கையளித்தது.
வருட திட்டம் -2017
Annual plan -2017
பழைய மாணவ சங்கம்
அல் -அக்ஸா தேசிய பாடசாலை
OLD BOYS ASSOCIATION
AL -AQSA NATIONAL SCHOOL
➡ 2017 ல் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற கலை, வர்த்தக வகுப்புக்களின் முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாடசாலை நிர்வாகம் மற்றும் ஏனைய சங்கங்களுடன் இணைந்து செய்தல்.
➡ O/L, A/L, GRADE 05 SCHOLARSHIP மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடாத்துதல்.
➡பாடசாலையின் வளர்ச்சியில் மாணவ, பெற்றோர், ஆசிரிய சமூகங்களது உச்ச பங்களிப்பை பெறுவதற்காக மூன்று பிரிவினருக்குமான வழிகாட்டல் கருத்தரங்குகள் (Counseling program) பயிற்சி பட்டறைகளை (Workshops) நடாத்துதல்.
➡நோன்பு காலத்தினை மாணவர்கள் பிரயோசனமிக்கதாக மாற்றியமைக்க அவர்களுக்கான விஷேட வழிகாட்டல்களை வழங்கள்.
Eg :SPECIAL BAYANS
➡ அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி சிரமதானங்களை செய்தல்.
➡பாடசாலையின் சாரணர் (BAND GROUP) இயக்கத்தை அபிவிருத்தி செய்து சீருடையையும் மாற்றியமைத்தல்.
➡மாணவ தலைவர்களுக்கான (PREFECTS) தலைமைத்துவ பயிற்சிகளை (LEADERSHIP TRAINING) வழங்குவதோடு சின்னங்கள், சீருடைகளை வடிவமைத்தல்.
➡ பாடசாலையின் பள்ளிப் பரிபாலனம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துதல்.
➡பொலிஸ் பிரிவுடன் இணைந்து பாடசாலை போக்குவரத்து பிரிவினை (TRAFFIC DIVISION) உடனடியாக நிறுவுதல்.
➡ நான்கு பெருநாள்களுக்கும் (புதுவருடம்,நோன்பு, ஹஜ், கிறிஸ்மஸ்) விளையாட்டு போட்டிகள், கழியாட்ட நிகழ்வுகளை நடாத்துதல்.
➡ பாடசாலை அணிகளை வலய, மாகாண மட்ட போட்டிகளுக்காக தயார் படுத்தல்.
➡ பாடசாலை அணிகளுக்கான சினேகபூர்வ போட்டிகளை(FRIENDLY MATCHES) வெளிமாவட்ட பாடசாலை அணிகளுடன் ஏற்பாடு செய்தல்.
➡ மாணவர்களின் மறைந்து கிடக்கின்ற ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் பொருட்டு மாணவ மன்றங்கள், மாணவ பாராளுமன்ற தேர்தல்களை நடாத்த பாடசாலை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கள்.
➡ மாபெரும் கண்காட்சி (EXHIBITION) ஒன்றினை வருட இறுதிக்குள் பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து நடாத்துதல்.
➡ வரருடாந்த பரிசளிப்பு விழா (ANNUAL PRIZE GIVING) மற்றும் பாடசாலை சஞ்சிகை வெளியீடு(MAGAZINE) என்பவற்றை முன்னின்று நடாத்துதல்.
NOTE - மேல் குறிப்பிடப்பட்டுள்ள சில நிகழ்வுகளுக்கான நேரம் திகதி என்பன குறிப்பிடப்படாவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் தேவையான காலங்களில் அமுலாக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்
அல் -அக்ஸா தேசிய பாடசாலை
கல்பிட்டி


0 Comments