புத்தளம் பஸ்தரிப்பு நிலையத்தில் கடை ஒன்றின் நிர்மாண வேலைகள் நீண்ட நாட்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த இடத்தில் அடிக்கடி பாதசாரிகள் நடைபாதையில் கருங்கல், மணல்களை போட்டு பாதசாரிகளுக்கு அசௌகரியங்களை ஏட்படுத்திவந்தனர்.
இது விடயமாக முன்னொரு முறை நகரசை உயர் அதிகாரிகளால் எச்சரிக்கையும் செய்யப்பட்டது.
இருந்தாலும் நகர சபையின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது அவர்கள் தொடர்ந்து பாதசாரிகளுக்கு இடையூறு செய்து வருவதை அறிந்த நகர சபை நிருவாகம் இன்று அதிரடியாக அவ்விடத்திற்கு சென்று பாதையோரம் குவிக்கப்பட்டிருந்த கல்,மண் என்பவற்றை நகர சபை வாகனங்களில் ஏற்றிச்செல்வதை படத்தில் காணலாம்.
0 Comments