Subscribe Us

header ads

கொடிகாமம் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் விபத்து சாரதி படுகாயம் (PHOTOS)

பாறுக் ஷிஹான்-


கொடிகாமம் மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில்  இடம்பெற்ற   ஆம்புலன்ஸ் வண்டி மற்றும்   ஹயஸ் வாகனம் விபத்தில்  ஒருவர்  காயமடைந்துள்ளார்.

இன்று(28)   பிற்பகல் 3  மணியளவில் பளை வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டியும் மட்டக்களப்பில் இருந்து வருகைதந்த ஹயஸ் வாகனமும் மோதியது.

இதன் போது  ஹயஸ் வாகனம் 150 மீற்றர்  தூரம் இழுத்துக்கொண்டு சென்றதுடன்  அருகிலுள்ள ஆலயத்தின் வேலியை  மோதி சேதப்படுத்தியது.

இச் சம்பவத்தில் மட்டக்களப்பினை சேர்ந்த ஹயஸ் வாகன சாரதி யோசப் பெனடிக் (வயது 60)என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார்   முன்னெடுத்து  வருகின்றனர் .





Post a Comment

0 Comments