புத்தளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான கூட்டம். இதில்தான்,தள வைத்தியசாலைக்கு முன்னால் நிறுவ முயற்சிக்கும் மதுபான கலஞ்சிய சாலை சம்பந்தமான எனது எதிர்ப்பை தெரிவித்தேன்.
இதில் பொதுமக்களும், சிவில்,சமூக அமைப்புக்களும் தனது ஆட்சேபனைகளை ,புத்தளம் பிரதேச செயலகத்தில் தெரிவிக்கலாம்.
நேற்றைய கூட்டத்தின் பின், பல அழுத்தங்கல் வந்தவண்னம் இருக்கின்றதை நினைக்கும்போது கவலையழித்தாலும், இதிலிருந்து பின்நிற்கப்போவதில்லை,இதற்கு மக்களின் முழு ஆதரவும் தேவை என்பதையும் சொல்லிக்கொள்கின்றேன்..
மேலும், பு/வடக்கு கோட்டக் கல்வி காரியாலத்தின் மதில்மேல் கட்டிடம் கட்டப்பட்டு மது விற்பனை சாலை இயங்கிவ்ருவதாகவும்,இது கலால் தினைக்களம் அனுமதி கொடுத்ததா என்று கேட்டபோது, இதற்கு நகர சபை அனுமதி கொடுத்திருந்ததால் தாங்கள் அனுமதிகொடுத்தாக் சொன்னபோது, அனுமதி கொடுபடவில்லை என்று அலிகான் உறுதியாக் சொல்லியதுடன் ,நான் பொய்சொல்வதாவும் சொன்னார்.
அதனைத்தொடர்ந்து இதற்கு அனுமதி கொடுக்க்ப்படவில்லை என்று நகர சபை தொழில் நுட்ப அதிகாரி உறுதியாக் சொன்னார். அதோடு நகர சபை அனுமதியின்றி கட்டப்பட்டிருந்தால் ,அது சட்டவிரோத கட்டிடம், நடைபாதையிலிருக்கும் கட்டிடங்களை அகற்றும் நகர சபை இதற்கு ஏன் வழக்கு தொடரவில்லை என்று நான் கேட்டபோது , அந்த அதிகாரி எதுவும் பேசாமல் அமர்ந்துவிட்டார்.
அதனால் என்னுடைய முதல் எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்,இனி மற்ற்வர்களும் அக்கறை எடுஙக்ள்


0 Comments