திருகோணமலை மாவட்டத்திலுள்ள 66 பாடசாலைகள் மூடுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதன் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட 66 பாடசாலைகளை 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் அதிகமானவர்கள் டெங்கு காச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments