உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மகத்தான வெற்றியை பெற்றது. இதனையடுத்து பாகிஸ்தானை சேர்ந்த 11 வயது சிறுமி அகீதாத் நாவீத், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதிஉள்ளார். கடிதத்தில் பா.ஜனதா இப்போது தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளது, பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியர்கள் இதயத்தை வெற்றிக்கொள்ள பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான அமைதியானது மிகவும் முக்கியமானது என்பதை 11 வயதே ஆகும் சிறுமி அகீதாத் நாவீத் புரிந்துக் கொண்டு உள்ளார்.
சட்டசபைத் தேர்தல்களில் பா.ஜனதா தன்னுடைய சூப்பர் பவரை காட்டிய பின்னர், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார். “ மக்களின் இதயத்தை வெல்வது என்பது மகத்தான பணியாகும் என என்னுடைய தந்தை கூறிஉள்ளார். ஒருவேளை நீங்கள் இந்திய மக்களின் இதயத்தை வென்று இருக்கலாம், அதனால் நீங்கள் உத்தரபிரதேசம் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் நான் உங்களிடம் சொல்ல விரும்புவது நீங்கள் மேலும் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் இதயத்தை வெல்ல வேண்டும், நட்புறவு மற்றும் அமைதியை நோக்கி நீங்கள் நகரவேண்டும். இருநாட்டுக்கும் நல்ல உறவானது தேவையாகும்,” என்று கடிதத்தில் கூறிஉள்ளார் சிறு நாவீத்.
இரு பக்கங்கள் அடங்கிய கடிதத்தில் “இரு நாடுகள் இடையேயும் அமைதி பாலத்தை ஏற்படுத்த வேண்டும், நாம் புல்லட்கள் வாங்க கூடாது, புத்தகங்கள் வாங்கவேண்டும் என முடிவு செய்ய வேண்டும். நாம் இனி துப்பாக்கிகளை வாங்க கூடாது, ஏழை மக்களுக்கு மருத்துவம் வழங்க வேண்டும்,” என சிறுமி கூறிஉள்ளார். 5 வகுப்பு படிக்கும் சிறுமி ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு அமைதி ஏற்பட வேண்டும் என்பது தொடர்பாக கடிதம் எழுதிஉள்ளார், இந்திய அதிகாரிகளிடம் இருந்து அவர் பதிலும் பெற்று உள்ளார் என தான்யா நியூஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.


0 Comments