Subscribe Us

header ads

விமானத்தில் இருந்து இறங்க சவுதி மன்னர் பயன்படுத்திய தங்க எஸ்கலேட்டர்



சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், உலகத்தில் உள்ள பணக்கார மன்னர்களில் ஒருவர். இவர் சில நாட்ளுக்கும் முன் இந்தோனேஷியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தோனேஷியா சுற்றுப்பயணத்தில் சில நாட்கள் அங்கேயே தங்கியிருக்க விரும்பியிருக்கிறார் சவுதி மன்னர்.

இதனால் மன்னர் சல்மான் பயன்படுத்துவதற்காக சுமார் 460 டன் எடையுள்ள பொருட்கள், 2 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் ஆகியவை இந்தோனேஷியா கொண்டு வரப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் சுமார் 1500 பேர் மன்னருடன் வந்துள்ளனர்.

இந்நிலையில் விமானம் மூலம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்திறங்கிய மன்னர் சல்மான், கீழே இறங்குவதற்கு தங்கத்தினால் ஆன எஸ்கலேட்டர் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

* மன்னர் சல்மானுடன் 7 விமானக்கள் வந்தது.
* அவருடன் வந்த பரிவாரங்கள் ஜகர்தாவில் உள்ள  4 நட்சத்திர ஓட்டல்களில் தங்கினர்
* மன்னர் சல்மானுடன் 100 பாதுகாவலர்களும் வந்து இருந்தனர்.  
* மன்னரின் பாதுகாப்புக்கு இந்தோனேஷியா சார்பில் 10 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து இந்தோனேஷிய பத்திரிக்கைகள் ஆச்சரியத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments