Subscribe Us

header ads

-தொழில் வழிகாட்டல் நிறுவனங்களின் ஒருங்கிணைவு பற்றிய மற்றுமொரு நிகழ்வு-

புத்தளம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு புத்தளத்திலுள்ள தொழில் வாய்ப்புக்கள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் கல்விக்காக உதவி புரியும் நிறுவனங்கள் போன்றவற்றோடு ஒரு இணைப்பை எற்படுத்தும் நோக்கில் இளைஞர் யுவதிகளின் தொழில் உரிமை சம்மந்தமாக சேவையாற்றி வரும்  CHANGE நிறுவனம் 23.02.2017 அன்று மற்றுமொறு ஒன்றுகூடல் நிகழ்வொன்றை நடாத்தியது.


CHANGE நிறுவனத்தின் அழைப்பை ஏற்று  கட்டிட நிர்மாணம் மற்றும் மோட்டார் வாகன துறையில் பயிற்றுவிக்கும் நிறுவனமான JAYALATH Campus,  ICT துறையில் புத்தளத்தில் தரமான பயிற்சியை வழங்கி வருகின்ற Hallam City College,  மோட்டார் வாகன துறையில் புத்தளத்தில் பயிற்சி நெறிகளை வழங்கி வரும் PCTT போன்ற நிறுவனங்களும், மாணவர்களுக்கு பயிற்சி நெறிகட்டணத்தை இலவசமாக பொறுப்பேற்றுவரும்  WUSC (World University Service of Canada) மற்றும் Voice Area Federation போன்ற நிறுவனங்களும் இந்நிகழ்வில் பங்குபற்றி தமது விளக்கங்களை முன்வைத்தனர்.


புத்தளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு CHANGE நிறுவனத்தின்  திட்ட முகாமையாளர் சட்டத்தரணி Mr.M.A.M.C.M.L.Dawdeen தலைமை ஏற்றதுடன்  புத்தளம் மாவட்ட உதவி பிரதேச செயலாளர் MR.S.P.Weerasekara மற்றும் WUSC நிறுவனத்தின் புத்தளம் மாவட்டத்துக்கான சிரேஷ்ட திட்ட அதிகாரி Mr.Sri Sutharsan அவர்களும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.










Post a Comment

0 Comments