கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த பரீட்சை முடிவுகளின் படி ,அல் அக்ஸா தேசிய பாடாசாலையில் கலைப்பிரிவில் 18 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதிபெற்றுள்ளனர் .தேசிய ரீதியில் கலைப்பிரிவில் பாடசாலைகளின் பெறுபேறுகள் அடிப்படையில் அல் அக்ஸா தேசிய பாடசாலை 17 வது இடத்தையும், தமிழ் மொழி மூலம் தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. இந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் உற்பட கற்பிட்டியிலிருந்து வெளி ஊர் பாடசாலைகளில் கற்று சிறந்த பெறுபேறுகளை (Z-Score 1.0001 க்கு அதிகமாக) பெற்ற மாணவர்களும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மைதானத்தில் இருந்து சாதனை புரிந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் சகிதம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்த ஊர்வலம் POWER HOUSE பகுதி நுழைவாயிலில் வெளியாகி பிரதான வீதியூடாக பயணித்து பாடசாலை பிரதான நுழைவாயில் ஊடாக வந்து பிரதான மண்டபத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட விழா மேடைக்கு பேன்ட் வாத்திய முழக்கத்துடன், சாரணர்கள் கௌரவப்படுத்தலுடன் சிறு மாணவியர்களின் தூவிய பூ மழையில் நனைந்த படி அழைத்து வரப்பட்டனர். வரலாறு காணாத இப்பாராட்டு விழா மூலம் முழுப் பாடசாலையும் விழாக்கோலம் பூண்டு இருந்தது.
சாதனை மாணவர்கள் ஊர்வலம் நிறைவடைந்த பின்னர் இரண்டாவது கட்ட நிகழ்வாக மாணவர்களுக்கு பதங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி M ரோஸ் புகாரி தலைமையில் இடம்பெற்றது. இவ் விழாவில் இஸ்லாகியா அரபிக் கல்லூரியின் அதிபர் அல் ஹாஜ் மின்ஹாஜ் அவர்கள் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இந்த நிகழ்வு “Al Aqsa Well-wishers” என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...
















0 Comments