Subscribe Us

இனி எல்லோரும் பறக்கலாம் ; இரத்மலானை விமான நிலையம் ஊடாக,முதல் முறையாக அனைத்துலக விமானப் போக்குவரத்து

இரத்மலானை விமான நிலையம் ஊடாக, கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அனைத்துலக விமானப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.
சிறிலங்கா விமானப்படையினருக்கான பயிற்சி மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காகவும், உள்நாட்டு விமான முனையமாகவும், செயற்பட்டு வந்த இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக மாலைதீவுக்கு விமானசேவை நடத்தப்படவுள்ளது,
மாலைதீவு விமான சேவை, மாலேக்கும் இரத்மலானைக்கும் இடையில் நாளாந்த சேவையை நடத்தவுள்ளது.
மாலைதீவின் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் மூசா சமீருக்கும், சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களிலேயே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது.

Post a Comment

0 Comments