Subscribe Us

header ads

கற்பிட்டியின் குரல் 'நான்' பகுதியில் கற்பிட்டியின் இளம் விளையாட்டு வீரர் “ அப்துல் ரஹ்மான்“ - நேர்காணல்.


அண்மைக்காலமாக கற்பிட்டியில் விளையாட்டுத்துறைகளில் சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் விளையாட்டு வீரர் ஒருவரை. கற்பிட்டியின் குரல் நான் பகுதியின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில் இலங்கை புத்தளம் கற்பிட்டியியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்   R.அப்துல் ரஹ்மான்.

ஆர். அப்துல் ரஹ்மானின் தேசிய மட்ட வெற்றிகள் சில.....

2010 ம் ஆண்டு YOUTH MEET 800 M National Level 2Nd Place

2011 ம் ஆண்டு பாடசாலை மட்டப் போட்டி 800 M NATIONAL LEVEL SEMI FINAL ROUND.

2012 ம் ஆண்டு பாடசாலை மட்டப் போட்டி 400M  NATIONAL LEVE 55TH PLACE 

2013 ம் ஆண்டு பாடசாலை மட்டப் போட்டி 800M NATIONAL LEVEL SEMI FINAL ROUND.

2015 JUNIOR NATIONALMEET 400  NATIONAL LEVEL 4TH PLACE



கேள்வி : உங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் தாருங்கள் ?

பெயர் ஊர் படிப்பு வேலை )

பதில்  : R. அப்துல் ரஹ்மான்.
கல்ப்பிட்டி,
கல் /அல்- அக்ஸா தேசிய பாடசாலையில் க.பொ.தா (உ/த).
இலங்கை இராணுவம்.



கேள்வி : விளையாட்டில் ஆர்வம் எப்போது தோன்றியது?

பதில் : 15 வது வயதில்

கேள்வி : நீங்கள் விளையாட்டுத்துறையில் கால் பதிக்க தூண்டிய ஒரு காரணி ?

பதில் : என் தாய்க்கு விளையாட்டின் மீது இருந்த பிரியம் மற்றும் விளையாட்டு வீரர்களுடைய கானொலிகள் பார்த்ததன் காரணத்தால்.

கேள்வி : உங்கள் விளையாட்டுத்துறையில் முதல் முயற்சி செய்த துறை ஞாபகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதைப்பற்றி சிறிது விளக்கம்?

பதில் :  ஆம் உதைப்பந்தாட்டம் (FootBall).  அல்- அக்ஸா தேசிய பாடசாலை 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட அணிக்காக விளையாடும் வாய்ப்பு.  ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் திரு. வதூத் அவர்களின் பயிற்றுவிப்பில்.

கேள்வி : உங்கள் விளையாட்டை பார்த்து முதலில் நன்றாக இருக்கின்றது என பாராட்டியது யார் ?

பதில் : கல்பிட்டிப் பிரதேசத்தின் புகழ் பெற்ற ஓவியர் திரு. லாபீர் அவர்களும் அவருடைய மனைவியும்.


கேள்வி : நீங்கள் முதன் முறை முயற்சி செய்த போது இத்துறையில் ஏற்பட்ட சங்கடங்களை பற்றி (நேயர்களுக்காக)?

பதில் :  நிறையவே இருக்கிறது ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். அப்போது இருந்த பாடசாலைச் சூழலும் என் சமூகமும் நான் அதிகாலை ஓட்டப் பயிற்சியை மேற்கொண்ட வேலையில் “பய்த்தியகாரன் தேவையில்லாமல் சாகுரான்” என்று வசை பாடியமை. இன்று நினைக்கையிலும் சோகம் என்னை சூழ்ந்து கொள்கிறது.


கேள்வி : உங்களின் இத்துறைக்கு கிடைத்த மிக பெரிய பாராட்டு அல்லதுபரிசு?

பதில் : 2012ம் ஆண்டு அகில இலங்கை பாடசாலை மட்ட 400ஓட்டப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் 5ம் இடத்தினைப் பெற்றமைக்காக என் பாடசாலையினால் என்னை வாழ்த்தி பதாகை (Bannerவைக்கப்பட்டமை. இதுவே நான் பெற்ற பதக்கங்கள்,கிண்ணங்கள், சான்றிதல்கள் அனைத்தை விடவும் பெறுமதிவாய்ந்த பரிசும் கௌரவமும்.


கேள்வி : சாதாரணமாக ஒருவருக்கு பல வேலைத்துறைகள் இருக்கும் அச்சமத்தில் பகுதி நேரமாகத்தான் விளையாட்டுத்துறை இருக்கும் நீங்கள் அதற்காக நேரங்களை ஒதுக்கி வைத்துள்ளீர்களா? அல்லது விளையாட்டுத்துறை மாத்திரம்தானா?


பதில் : விளையாட்டுத்துறை மாத்திரம் தான்

கேள்வி :  இக்கலைப் பயணத்தில் உங்களைப் பாதித்த விளையாட்டு வீரர்கள் யார்ஆதர்சம் (inspiration) என்று சொல்லுமளவு யாரேனும் ? Any Foreign Spotors ?


பதில் : 1 . உசைன் போல்ட். (ஜமேக்கா. தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் போட்டியில்  100 ஓட்டப் போட்டியில் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் பெற்றவர.;)

2 . டேவிட் ருபீசியா (கென்யா. 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின; 800ஓட்டத்தில் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் பெற்றவர்.)

கேள்வி :  சமகாலக் விளையாட்டு வீரர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள்?


பதில் : கிரானி ஜேம்ஸ். (கிரீனடா) (2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின; 400ஓட்டத்தில் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் பெற்றவர்.)

கேள்வி :  இத்துறையில்தான் சாதிக்க வேண்டும் என்ற தீர்வின் அனுபவத்தை எப்படி பெற்றீர்கள் ?


பதில் : ஒரு கால கட்டத்தில் என் பாடசாலை விளையாட்டுத் துறையால் தேசிய மட்டம் வரை பேசப்பட்டது. மாறாக நான் படிக்கின்ற காலப்பகுதியில் விளையாட்டுத்துறை மிகுந்த வீழ்ச்சி நோக்கிப் பயணிக்கத் வேலையில். 


கேள்வி : உங்களுக்கு OLYMBIC சாதிக்கும் சந்தர்பம் வந்தால் என்ன செய்வீர்கள்?

பதில் : என் இலங்கைத் தாய்த் திருநாட்டிற்காக ஒரு பதக்கத்தை இன்ஸா அல்லாஹ் நிச்சயம் வென்றெடுப்பேன்.


கேள்வி : வாழ்கையின் இலக்கு என்ன?

பதில் : சிறந்த உடற்பயிற்சி அளிக்கும் ஆசிரியன். 





கேள்வி: எம் பிரதேச விளையாட்டுத் துறையின் சமீப கால வீழ்ச்சிக்கான காரணம் ? (உங்கள் பார்வையில்)

பதில்: எம் பிரதேச மக்கள் இத் துறையினை ஒரு பொழுது போக்காக மட்டும் பார்ப்பதும், இத்துறையினால் எதிர் கால வாழ்க்கைக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்ற எண்ணத்தில் இருப்பதும். 

கேள்வி : இத்துறையில் சாதிக்கவிரும்பும் இளம் வயதினருக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்?

பதில் : வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ, சட்டத்தரனியாகவோ அல்லது ஆசிரியராகவோ மாத்திரம் இருந்தால் மட்டுமே இவ்வுலகை வெற்றி பெறலாம் அல்லது சமூகத்தில் அந்தஸ்த்து கிடைக்கும் என்ற எண்ணத்திலிருந்து தெளிவு பெற்று சிறந்த விளையாட்டு வீரனாலும் இவ்வுலகை வெற்றி கொள்ள முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


கேள்வி : உங்கள் அடைவுகளுக்கு குடும்பத்தினர் எவ்வாறு  ஊக்கம்அளித்தனர்.

பதில் : என் இது வரையான வெற்றிகளுக்கு என் தாய் மட்டுமே  பங்குதாரர். காரணம் தன் தங்க நகைகளை அடகு வைத்து இன்று வரை எனக்காய் துணை நிற்கும் நல்லுள்ளம் என் தாய்.

கேள்வி :  இளம் வயதில் சிலஅடைவுகளை தொட்டுவிட்டீர்கள்இதற்கு திறமை தவிர வேறு எது காரணங்கள் இருக்கின்றனவா

பதில் : என் தாயின் பிராத்தனையும் , என் பிரதேச மக்களினதும் இளைஞர்களினதும் ஊக்கமும் எதிர்பார்ப்பும். 

கேள்வி : இலங்கைக் கலைஞர்களை இலங்கை இரசிகர்கள்,  வரவேற்பளிப்பதில்லை என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

பதில் :  இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கை ஊடகங்களேயாகும். காரணம் மக்கள் ஊடகங்களின் மூலமே கலைஞர்களை காண்கின்றனர். எம் நாட்டு ஊடகங்கள் வெளிநாட்டுக் கலைஞர்களுக்கே முன்னுரிமை கொடுத்து அவர்களையே நாளாந்தம் காட்சிப்படுத்துகின்றனர். எம் நாட்டுக் கலைஞர்களை தட்டிக் கழித்து விடுவதனால் மக்களுக்கு எம் நாட்டுக் கலைஞர்கள் பற்றி தெளிவு அற்றுப்போய் விடுகின்றது. இதனாலேயே உள்நாட்டுக் கலைஞர்களை மக்கள் வரவேற்பதில்லை.


கேள்வி : இத் துறை மூலம் நீங்கள் உணர்ந்து கொண்ட சில விடயங்கள் என்ன?

பதில் : விடா முயற்சி> தன்னம்பிக்கை> பணிவு.


நன்றி 
குறிப்பு : நேர்காணலின் தொகுப்பு கற்பிட்டியின் குரல் நிருபர் BAHARDEEN MOHAMED ARAFATH.

Post a Comment

1 Comments