இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 28ம் திகதி தேசிய ரீதியாக கௌரவ அமைச்சர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியில் 50 சதோச நிலையங்கள் திரந்துவைப்பு.
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் கௌரவ. அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் ஏனைய சில அமைச்சர்களும் ஒரே நாள் ஒரே நேரத்தில் திரப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றன.
அந்த வகையில் கல்பிட்டியிலும் சதோச நிலையம் கல்பிட்டி பிரதேச அகில இங்கை மக்கள் காங்ரசின் அமைப்பாளர் ஜனாப் A.R.M. முஸம்மில் அவர்களின் தலைமையில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் M.H.M நவவி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு 28ம் திகதி மாலை 5:00 மணிக்கு திரந்துவைக்கபட உள்ளது.
அத்தோடு இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்ரஸ் பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M. அலி சப்ரி,முன்னால் மாகாண சபை உறுப்பினரும் ACMC உயர் மட்டகுழு உறுப்பினர் அல் ஹாஜ் ஆப்தீன் எஹியா மற்றும் கல்பிட்டி பிரதேச அகில இலங்கை மக்கள் காங்ரஸ் உயர்மட்ட உருப்பினர்கள் கல்பிட்டி பிரதேச சகல அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பொது மக்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர்.
மக்களுக்கு தேவையான சகலவிதமான உலர் உணவுப் பொருட்களை மிகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் இக்கல்பிட்டி பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ACMC KALPITIYA
0 Comments