கடந்த 40 வருடங்களான மாணவர்களின் உயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் வயோதிப பெண்மணி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கேகாலை, ஹெட்டிமுல்ல பண்டாரநாயக்க ஆரம்ப வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் செல்வதற்காக வயோதிப பெண் ஒருவர் உதவி செய்து வருகிறார்.
கேகாலை பரகம்மன கிராமத்திற்கு மத்தியில் வாழும் கே.லலீ வயலட் என்ற 80 வயதுடைய பாட்டியே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பெண்மணிக்கு 1972ஆம் ஆண்டு களுத்துறை கம்பாத பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் அவர் கணவரின் வீட்டில் குடியேறியுள்ளார்.
இதேவேளை லலீயின் கணவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் தனது ஒரே மகளுடன் பெற்றோரின் வீட்டில் மீண்டும் குடியேறியுள்ளார்.
அந்த பிரதேசத்தில் கூலி வேலை செய்து தனது மகளை படிக்க வைத்துள்ள லலீ, பின்னர் 1978ஆம் ஆண்டும் ஹெட்டிமுல்ல பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலையில் தனது மகளை சேர்க்க சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் கேகாலை புலத்கொஹுபிட்டிய பிரதான வீதில் பஸ் வண்டிகள் மற்றும் தனிப்பட்ட வாகனங்கள் பாரிய அளவில் பயணித்துள்ள நிலையில், அந்த பிரதேசத்தில் பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்து செல்ல மிகவும் சிரமப்படுவதனை அவர் பார்த்துள்ளார்.
பின்னர் அதற்கு அடுத்த நாளில் இருந்து தனது மகளை, பாடசாலைக்கு அனுப்பி விட்டு காலை 6.15 மணியில் இருந்து வீதியில் பயணிக்கு பாடசாலை மாணவர்களுக்கு விபத்து ஏற்படாத வகையில் பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். 40 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் சேவை செய்யும் அவருக்கு தற்போது 80 வயதாகின்றது.
அவரது மகள் தற்போது வரையில் திருமணம் செய்து தனியாக சென்றுள்ள நிலையில் 80 வயதுடைய இந்த வயோதிப பாட்டி தனியாக வீட்டில் வசித்து வருகின்றார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வயோதிப பாட்டியான லீலி,
இன்று சில பாடசாலை வேன்களின் உரிமையாளர்கள் மாதத்திற்கு நூறு ரூபாய் வழங்குகின்றனர். சில பெற்றோர் எனக்கு முடிந்த பணத்தை தருவார்கள். அதனை தவிர வேறு யாரிடமும் எனக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை.
நான் இந்த கிராமத்தின் நிலை தொடர்பில் அனைவருக்கும் கூறினேன். எனினும் பதில் கிடைக்கவில்லை நான் இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளேன்.
நான் தினமும் காலை 6.15 மணியளவில் இந்த இடத்திற்கு வருவேன். மீண்டும் காலை 8 மணிக்கு வீட்டிற்கு செல்வேன். மீண்டும் 11 மணியளவில் இந்த இடத்திற்கு வருவேன்.
சில பிள்ளைகளின் பெற்றோர் பிள்ளைகளை அழைத்து செல்ல வரவில்லை என்றால் நான் அவர்களின் வீட்டிற்கு சென்று விட்டு வருவேன். நான் இங்கு வந்து 40 வருடங்களாகின்றன. எந்தவொரு விபத்தும் இடம்பெற்றதில்லை. எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. எனினும் அவற்றினை குறித்து வருத்தப்படாமல் இந்த இடத்திற்கு வருகின்றேன் என கண்ணீருடன் அந்த வயோதிப பெண் தெரிவித்துள்ளார்.
0 Comments