Subscribe Us

header ads

உங்களில் யார் சாதனைப் பெண்? புத்தளத்தில் சிறந்த சாதனைப் பெண் விருதுக்கான தேடல் -2016


புத்தளத்தில் இலை மறை காய்களாக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை செய்திருக்கிறார்கள்,  செய்து கொண்டும் இருக்கிறார்கள். 

இவர்களை சமூகத்துக்கு முன்மாதிரிகளாக அடையாளம் காட்டுவது ஏனையவர்களுக்கு ஊக்குவிப்பாக இருப்பதுடன் காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  CHANGE நிறுவனத்தினர் இத்தேடல் முயற்சியில் இறங்கியுள்ளதுடன் பொருத்தமானவர்களை கண்டறிந்து பாராட்டி, பரிசு, விருது வழங்கி கௌரவிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். இம்முயற்சியில் உங்கள் அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.

சமூகத்திற்காக அளப்பெரிய சேவைகள் செய்த பெண்களில் யாராவது இவ்விருதுக்கு தகுதியானவர் என நீங்கள் கருதும் பட்சத்தில் அவரின் பெயரை விருதுக்காக சிபாரிசு/பரிந்துரை செய்யலாம். 

விபரங்கள் :

1. புத்தளம், முந்தல், வண்ணாத்திவில்லு, கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெண்களை மாத்திரம் பரிந்துரை செய்யலாம்.

2. சாதனை விருதுக்காக பிரேரிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அவர்களின் அனுமதியுடன் எமது Facebook பக்கத்தில் வாக்கெடுப்புக்காக விடப்பட்டு அதிகூடிய வாக்குகளைப் பெறும் நபர் விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்படுவார்.

3. பிரேரணை மற்றும் வாக்களிப்பில் ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொள்ளலாம்.

4. பிரேரணைகளை எமது CHANGE நிறுவனத்தின் Facebook க்கு Inbox செய்வதன் மூலமாகவோ, WhatsApp மூலமாகவோ மேற்கொள்ளலாம்.

5. பிரேரணைக்கான காலப்பகுதி March 08 முதல் March 14 மாலை 5 மணி வரையிலாகும்.

6. வாக்கெடுப்புக்கான காலப்பகுதி March 16 முதல் March 20 மாலை 5 மணி வரையிலாகும்.

7. Facebook மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் / தவறியவர்கள் 2017.03.21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மு.ப. 10.00 - பி.ப. 4.00 வரையான காலப்பகுதிக்குள் CHANGE காரியாலயத்தில் உங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

8. ஒருவர் ஒருவரைத்தான் பிரேரிக்க முடியும்.

9. நீங்கள் பிரேரிப்பவர் வெற்றிபெறுமிடத்து பிரேரிப்பவருக்கான விசேட பரிசும் வழங்கப்படும்.(குலுக்கல் முறையில்)

10.விண்ணப்பபடிவத்திற்கு முதலாவது Commentஐ பார்க்கவும்.

மேலதிக விபரங்களுக்கு :
M.F.F வஹீபா
(திட்ட உதவியாளர்)
Tel:0322266207
No:55/A, 1/1,2nd Cross Street, Puttalam.
E-mail:change.px@gmail.com
Facebook ID:Changepx Ngo
WhatsApp:0752780709

Post a Comment

0 Comments