Subscribe Us

header ads

நடு ரோட்டில் இறங்கிய ஹெலிகாப்டர் டிரக் டிரைவரிடம் வழி கேட்ட பைலட் (VIDEO)


கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த ராணுவஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று அங்கு உள்ள நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிரங்கியுள்ளது.


ஹெலிகாப்டரில் இருந்த பைலட், சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் ஓட்டுநரிடம் தான் வழிமாறி வந்துவிட்டதாகவும், இதனால் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு எப்படி செல்லவேண்டும் என்று கேட்டறிந்து அதன் பின் சென்றதாகவும் கூறப்படுகிறது.



இதுகுறித்து கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், இராணுவ ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு சரியாக இடங்கள் மற்றும் புவி அமைப்புகள் குறித்து தெரிகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக இதுபோன்று பயிற்சி அளிக்கப்படும்.



சரியான இடத்தை அறிந்துக்கொள்வதற்கான இந்தப் பயிற்ச்சியில் பைலட் வெற்றி பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments