நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனான விசேட ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நோர்வே நிறுவனங்களில் கப்பல்கள் சர்வதேச அங்கிகாரம் பெற்றவை.
அத்துடன், நோர்வே நாட்டு கப்பல்களில் பல்வேறு நாட்டினரும் பணியாற்றி வருகின்றனர். எனவே, இலங்கையர்களும் நோர்வே நாட்டு கப்பல்களில் பணியாற்ற வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம், தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்வார்களாயின் முன்னேற்றம் காண்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் முன்னேற்றம் காண வேண்டுமாயின் இந்த துறைகள் குறித்து விஷேட அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments