முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இவ்வார அரசியலில்
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் புதல்விக்கு பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்திய
துறையில் கல்வி கற்பதற்காக புலமைப்பரிசில் வழங்கப்பட்டது பற்றியே அதிகம் பேசுபொருளாக
இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.
இவ்விடயம்
முதன்முதலாக ஊடகங்களில் வெளிவந்தபோது அமைச்சர் ரிசாத்தின் தரப்பினர் அதனை உறுதியாக
மறுத்திருந்தார்கள். ஆனால் விடயம் ஆதாரபூரவமாக அம்பலமானதனால் உண்மையை
ஏற்றுக்கொண்டு அதனை நியாயாடுத்த வேண்டிய கட்டாய நிலை அமைச்சருக்கு ஏற்பட்டது.
இதில் அமைச்சர்
தரப்பிலிருந்து முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களை முன்வைத்ததனால் அமைச்சர்
முழுபூசணிக்காயை மறைப்பதற்காக மிகவும் கஷ்டப்படுகின்றார் என்ற தோற்றப்பாடு உருவாகியுள்ளது.
ஆரம்பத்தில் தனது
மகளுக்கு அவ்வாறு எந்தவொரு புலமைப்பரிசில்களும் பெற்றுக்கொள்ளவில்லை என்று
அமைச்சர் தரப்பு மறுத்தது மட்டுமல்லாது அமைச்சரின் மகள் தென்னாபிரிக்காவில் கல்வி
கற்பதாகவும் கதையினை பரப்பிவிட்டார்கள்.
பின்பு விடயம்
ஊடகங்களின் கவனித்தினை பிடித்துக்கொண்டதனால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்
முடியாமல் தனது மகள் தகப்பனின் அன்புக் கட்டளையை ஏற்று ஏழைபெண் ஒன்றுக்கு அந்த
புலமைப்பரிசிலை விட்டுக்கொடுத்துள்ளதாக கதை எழுதி முடித்துள்ளார்கள்.
இங்கே கேள்வி
என்னவென்றால் இதனை ஆரம்பத்தில் ஏன் மறுக்க வேண்டும்? தனது மகள் தென்னாபிரிக்காவில்
கல்வி கற்பதாக ஏன் பொய் கூறவேண்டும்? இதில் ஒரு வில்லங்கம் இருந்ததனாலேயே அவ்வாறு
நாடகமாடியுள்ளார்கள். இதனை ஆரம்பத்தில் மறுக்காது விட்டிருந்தால் ‘சூடு போடும்
மாடு வைக்கோல் தின்பது’ போல இந்த விவகாரம் இவ்வளவு தூரம் உருபெருத்திருக்க
வாய்ப்பில்லை.
அது மட்டுமல்லாது
இந்த விவகாரம் பாகிஸ்தான் வரைக்கும் சென்றுள்ளது. ஏழைகளுக்காக வழங்கப்படுகின்ற
இவ்வாறான புலமைப்பரிசில்களை அமைச்சர் ஒருவர் தனது மகளுக்கு வழங்கியதனால்
பாகிஸ்தான் தூதுவராலயம் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது.
இதனால் இனிவரும்
காலங்களில் இவ்வாறான புலமைப்பரிசில்கள் அமைச்சர் ரிசாத்துக்கு வழங்கப்பட மாட்டாது
என்ற சூழ்நிலை அதிகம் கானப்படுவதானால், தனது மகளுக்கு இதனை வளங்கியதனால்தான் இந்த
புலமைப்பரிசில் திட்டம் நிறுத்தப்பட்டது என்ற அவப்பெயர் தன்மீது வந்துவிடக்கூடாது என்பதற்காக,
இந்த பழியை முஸ்லிம் காங்கிரசின் மீது போட்டுவிட்டு இதனை அரசியல்மயப்படுத்தி, தாங்கள்
தப்பித்துக்கொள்ளும் ஊடக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.
அதாவது இந்த புலமைபரிசில்கள்
இதுவரைகாலமும் மிகவும் இரகசியமாக பேணப்பட்டு வந்ததாகவும், கடந்த காலங்களில் சுமார்
ஐம்பது பேருக்கு இது வழங்கப்பட்டதாகவும் இதனை முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் குழப்பி
பகிரங்கப்படுத்தியதனால் இனிமேல் இவ்வாறான புலமைப்பரிசில்கள் எமக்கு கிடைக்காது
என்றெல்லாம் திரைக்கதை அமைத்துள்ளார்கள்.
வில்பத்து
விவகாரத்தில் இரகசியமான முறையில் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதில் அமைச்சர் கவனம்
செலுத்தாமல் அந்த பிரச்சினையை பகிரங்கப்படுத்தி குழப்பியபோது, நாங்கள் கூறிய அதே
கருத்தினை இந்த விடயத்தில் திருப்பி கூறுவது போன்று உள்ளது.
இலங்கையில் உள்ள
முஸ்லிம் மாணவர்களுக்கென்று பாகிஸ்தான் பல்கலைக்கழகம் இந்த புலமைப்பரிசில்களை
வழங்குவதனால், இந்த விவகாரம் பகிரங்கப்படுத்த படுவதில் எந்தவித பாதிப்பும்
ஏற்படப்போவதில்லை. ஏனென்றால் முஸ்லிம் மாணவர்கள் அல்லாத அந்நிய மாணவர்களை அந்த
பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளாது என்பது இங்குள்ள சிங்கள, தமிழ் மாணவர்கள் அறிந்த
விடயமாகும்.
அத்துடன் இலங்கை
முஸ்லிம் மாணவர்களுக்கான இவ்வாறான புலமைப்பரிசில் திட்டங்கள் இன்று நேற்று வளங்கப்படுகின்ற
ஒரு விடயமல்ல. ஏ.சி.எஸ். ஹமீத் அவர்கள் வெளிவிவகார அமைச்சராக இருந்த
காலத்திலிருந்து இது அறிமுகப்படுத்தப்பட்டு, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ஏழை
மாணவர்களுக்கு மிகவும் நீதமான முறையில் பங்கிடப்பட்டு வந்தது.
அமைச்சர் ரிசாத்
தரப்பின் கூற்றுப்படி, இதுவரை காலமும் ஐம்பது பேருக்கு இந்த புலமைபரிசில்கள்
வழங்கப்பட்டதாக கூறுகின்றார்கள். அவ்வாறாயின் அந்த ஐம்பது பேர்களும் யார்? கடந்த
பொது தேர்தலில் முப்பத்தி மூவாயிரம் வாக்குகளை வழங்கிய அம்பாறை மாவட்டத்திலிருந்து
எத்தனை பேர்கள் இந்த புலமைபரிசில்களை பெற்றார்கள்? அவ்வாறில்லை என்றால் அம்மக்கள்
தேர்தல்களில் வாக்குகள் வழங்குவதற்கு மட்டும்தான் தேவைப்படுகின்றார்களா?
மிகவும்
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கென்று வழங்கப்படுகின்ற இவ்வாறான
புலமைப்பரிசில்களுக்கு ஏழை மாணவர்கள்தான் தெரிவு செய்யப்பட்டார்களா? அல்லது தனது
கட்சி சார்ந்தவர்களுக்கு வழங்காட்டதா? அல்லது கொமிசன் பெற்றுக்கொண்டு கொழும்பில்
உள்ள வர்த்தகர்களின் பிள்ளைகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா? நாட்டின் 25
மாவட்டத்துக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதா? கிழக்கு மாகாணத்திலிருந்து இதற்கு எத்தனை
பேர்கள் தெரிவு செய்யபட்டார்கள்? போன்ற கேள்விகளுக்கு நாங்கள் விடை
தெரியாதுள்ளோம்.
எனவே ‘நஞ்சுப்போத்தல்
இலவசம் என்றால் அதில் எனக்கும் ஒன்று’ என்ற நிலையை கைவிட்டுவிட்டு, கோடீஸ்வரரான
தாங்கள் ஏழைகளின் வயிற்றில் கையடிக்காமல் மிகவும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்
என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
0 Comments