இலங்கை அரசினால் புத்தளம் மாவட்டத்தில் “இரு அரச கரும மொழி
பிரதேசங்களாக” பிரகடனப்படுத்தப்பட்ட புத்தளம், கல்பிட்டி, முந்தல்,
வண்ணாத்தவில்லு போன்ற பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மொழி பேசும் மக்கள்
சிங்கள மொழி தெரியாத காரணத்தினால் ஏற்படும் அசௌகரியங்களையும், அரச
அலுவலகங்களில் இரு மொழி அமுலாக்கலின் தற்போதைய நிலைமைகளையும் அடிப்படையாக
கொண்டு கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் திருமதி.தினேசா அவரளின் தொழில்நுட்ப உதவிவுடனும் CHANGE நிறுவனத்தினால் நிறுவப்பட்ட “புத்தளம் மாவட்ட மனித உரிமைகள் அழுத்தக் குழு” வின் பங்களிப்புடனும் CHANGE நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இவ் ஆய்வின் பிரதிகள் உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்வதற்காகவும்,
அழுத்தங்களை வழங்குவதற்காகவும் “புத்தளம் மாவட்ட மனித உரிமைகள் அழுத்தக்
குழு” மற்றும் CHANGE நிறுவனத்தினரால் கடந்த 28, 29ம் திகதிகளில் பின்வரும்
நிறுவனங்களில் கையளிக்கப்பட்டது.
1. கௌரவ மனோ கணேசன், அமைச்சர் – தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு
2. ஆணையாளர் – இலங்கை அரச கரும மொழிகள் ஆணைக்குழு
3. ஆணையாளர் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
4. விசாரணை அதிகாரி - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு – புத்தளம்
5. பணிப்பாளர் - தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணகத்திற்குமான அலுவலகம்
6. பணிப்பாளர் - நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்
CHANGE நிறுவனம் மொழி உரிமைக்கான தனது முயற்சியை தொடரவிருக்கிறது. இதில் உங்கள் பங்களிப்புக்களையும் வழங்கலாம்.

0 Comments