Subscribe Us

வேலைவாய்ப்பு விசா வழங்குவதில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துகின்றது கட்டார்.

கத்தாரின் வேலைவாய்ப்பு விசா நடைமுறைகளை கவனித்து வந்த 'ஆட்சேர்ப்பு நிரந்தர குழு' (Permanent committee for recruitment) கலைக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சகம் (Ministry of administrative development, labour and social affairs - MADLSA) ஆன்லைன் வழியாக விசா விண்ணப்பங்களை பெறத் துவங்கியுள்ளது. இந்த புதிய நடைமுறை வேலையளிக்கும் நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் போன்றோரின் சிரமங்களை மட்டுப்படுத்தும் சிறந்த நடைமுறையாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையை தொழிலாளர் அமைச்சகம் (MADLSA) மற்றும் உள்துறை அமைச்சகத்தின் (MOL) கூட்டு தரவு தளம் மூலம் (Joint data base) இயக்கப்படும். விசா பெறுவதற்கு ஸ்பான்சரும் ஊழியரும் கையெழுத்திட்ட ஒப்பந்த நகல், அடிப்படை தொழிலாளர் சட்டம் படி விண்ணப்பதாரர் நிறுவனத்தின் கடமைகளை குறிப்பிட்டு விண்ணப்பிக்கப்படுபவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 
தொழிலாளர் அமைச்சகத்தின் பரிசீலனை மற்றும் பரிந்துரைக்குப் பின் உள்துறை அமைச்சகம் விசா வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ளும். அதுபோல் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விசா விண்ணப்பத்தின் அவ்வப்போதைய நிலை (Follow up the status) குறித்தும் தெரிந்து கொள்ளலாம். 
Source: Gulf Times 
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments