கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த
வாரம் வெளியாகி இருந்தது. இந்த பரீட்சை முடிவிகளின் படி அல் அக்ஸா தேசிய
பாடாசாலையில் கலைபிரிவில் 18 மாணவர்கள்
பல்கலைக்கழகம் செல்ல தகுதிபெற்றுள்ளனர்.
இணைந்த கணித்தில் ஒரு மாணவரும் , உயிரியல்
விஞ்ஞானத்தில் 3 மாணவர்களும், வர்த்தகத்தில் 3 மாணவர்களும் மற்றும் கலைபிரிவில் 33 மாணவர்களும் தோற்றி
இருந்தனர். இதில் உயிரியல் விஞ்ஞானத்தில் 2 பேரும் , வர்த்தகத்தில் ஒருவரும்
மற்றும் கலைபிரிவில் 29 மாணவர்களும் சித்தியடைதுள்ள அதே
வேலை கலைபிரிவில் 18 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதிபெற்றுள்ளனர்.
பாடசாலையின் வெற்றிக்கு வித்திட்ட இந்த சகல
மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், பெற்றோகள், அபிவிருத்தி குழுவினர்
மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.


0 Comments