கற்பிட்டி தொடர் மின் வெட்டு வீதி ஆர்பட்டதிலிருந்து தீர்வு மேசைக்கு... ஆர்பாட்டத்தின் வெற்றியின் முதல் படி அல்ஹம்துலில்லாஹ்!
நேற்று இடம்பெற்ற தொடர் மின் வெட்டுக்கு எதிரான கடையடைப்பு மக்கள்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்று கற்பிட்டி பிரதேச செயலாளர்
காரியாலயத்தில் பொதுமக்களுக்கும் பிரதேச செயலாளர்,
புத்தளம் மாவட்ட மின்சார சபை அதிகாரிக்களுக்கும்
இடையிலான சந்திபோன்று இடம்பெற்று வருகிறது. இந்த சந்திப்பில் புத்தளம் மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் M.H.M நவவி , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான N.T.N தாஹிர் S.H.Mநியாஸ், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் மில்ஹாஜ் மற்றும்
கற்பிட்டியின் முக்கிய அரசியல் பிரதிநிகளான J.M தாரிக் A.R.M முஷம்மில்
U.M.M அக்மல் A.R
பாவ்ஷான், அலாவுதீன் போன்றவர்களுடன் ஊர் மக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
Photo: RIZVI







0 Comments