Subscribe Us

ஐந்தாவது அகவையில் கால் பதிக்கும் கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் அமைப்பு (KDSQ)


சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப கத்தரில் வாழும் கற்பிட்டி சகோதரர்களின் உழைப்பில் கிடைக்கும் சிறு தொகைகளை கொண்டு கற்பிட்டியில் உள்ள தேவையுடைய வறிய மக்களுக்கு பல சேவைகளை செய்து வரும் KDSQ அமைப்பு தமது வெற்றிகரமான நான்கு வருட சேவையை அல்லாஹ்வின் உதவியால் பூர்த்தி செய்த பூரண திருப்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஐந்தாவது ஆண்டில் காலடி வைக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்...!
Kalpitiya Development Society-Qatar KDSQ அமைப்பு பல புதிய திட்டங்களுடன் ஐந்தவது வருடத்திற்குள் நுழைய தயாராகி வருகிறது. அந்தவகையில் கடந்தகாலங்களில் வறிய மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு, மருத்துவ நிதி உதவி, ரமழான் உலர் உணவு (Feed a needy neighbour), பள்ளிவாசல்களுக்கான உதவிகள் என பலதரப்பட்ட சேவைகளை செய்து வந்த எமது அமைப்பு. எதிர்வருங்காலங்களில் கற்பிட்டியில் உள்ள ( வைத்திய சாலை, MOH Office, போன்ற பொது மக்கள் பயன்படுத்தும்) பொது நிறுவனங்களை தொடர்புகொண்டு புதிய தேவையான விடயங்களை செய்ய புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. அந்தவையில் கத்தார் நாட்டில் தொழில் புரிந்துவிட்டு கற்பிட்டியில் இருக்கும் KDSQ வின் முன்னாள் உறுப்பினர்களின் உதவியுடன் பல புதிய வேலைத் திட்டங்களை செய்வதற்கு தயாராகி வருகிறது KDSQ அமைப்பு.

#முடிந்ததை செய்வோம் #தொடர்ந்து செய்வோம் #எதாவது ஒரு பயனளிக்கும் வேலையை செய்வோம் #எங்கிருந்தாலும் செய்வோம்.

Post a Comment

0 Comments