Subscribe Us

ஞானசாரர் விடயத்தில், நழுவினார் மைத்திரி - முஸ்லிம் எம்.பி.களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்தனர்.
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்திவரும் ஞானசாராவை கைது செய்யுமாறு இதன்போது முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினர்.
இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி ஞானசாரவை கைது செய்வதற்கு தாம் தடையில்லை எனவும், இதுகுறித்து தான் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் தலைவரும், முப்படைத் தளபதியுமான மைத்திரிபால சிறிசேனா நினைத்திருந்தால் முஸ்லிம் எம்.பி.க்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அதே மேசையிலிருந்தபடியே அமைச்சர் சாகல ரட்நாயக்காவுக்கு உத்தரவிட்டு, உடனடியாக ஞானசாராவை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
எனினும் ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை.
சரி, முஸ்லிம் எம்.பி.க்களுடன் சந்திப்பு முடிந்த பின்னராவது அவர் அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடன் தொடர்புகொண்டு ஞானசாரவை கைது செய்வதாக கலந்துரையாடியதாக எந்தத் தகவலும் இல்லை.
ஆகமொத்தத்தில் நமது முஸ்லிம் எம்.பி.க்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.
அத்துடன் ஞானசாராவை கைதுசெய்ய தான் தடையில்லை, இதுகுறித்து அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடன் கலந்துரையாடுவதாகவும் கூறி முஸ்லிம் எம்.பி.க்கள் தன்பக்கம் தந்த பந்தை, அப்படியே ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரும், பிரதமர் ரணிலின் முக்கிய நண்பருமான சாகல ரட்நாயக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ஞானசாரா விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால நழுவியுள்ளார் என்பதே உண்மையாகும்..!

Post a Comment

0 Comments